Published : 20 Dec 2019 08:40 AM
Last Updated : 20 Dec 2019 08:40 AM
தமிழக ஊரக உள்ளாட்சிகளுக்கு அடிப்படை செயல்பாட்டு மானிய மாக வழங்க வேண்டிய ரூ.2 ஆயிரத்து 564 கோடியே 64 லட்சத்தை விரைவில் வழங்க வேண்டும் என, மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமரிடம் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கோரிக்கை விடுத்தார்.
மத்திய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமரை டெல்லியில், தமிழக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சந்தித்தார். அப்போது பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனு அளித்தார். அம்மனுவில் கூறியிருப்பதாவது:
மத்திய 14-வது நிதி ஆணையம் பரிந்துரைப்படி, தமிழக உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடந்த 2018-19-ம் ஆண்டுக்கான 2-வது தவணை அடிப்படை மானியத் தொகையான ரூ.876 கோடியே 93 லட்சத்தை விடுவித்ததற்கு நன்றி தொரிவித்துக் கொள்கிறேன்.
அடிப்படை மானியம்
மேலும், ஆணையத்தின் பரிந் துரைப்படி, 2017-18-ம் ஆண்டுக்கு வழங்க வேண்டிய செயல்பாட்டு மானியம் ரூ.194 கோடியே 78 லட்சம், 2018-19-ம் ஆண்டுக்கு வழங்க வேண்டிய ரூ.221 கோடியே 20 லட்சம் மற்றும் 2019-20-ம் ஆண்டுக்கான அடிப்படை மானியம் ரூ.2 ஆயிரத்து 369 கோடியே 86 லட்சம் நிலுவையில் உள்ளது.
மாநில தேர்தல் ஆணையம், புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களைத் தவிர்த்து 27 மாவட்ட ஊரக உள்ளாட்சிகளுக்கு டிச.27 மற்றும் 30-ம் தேதிகளில் வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவித்துள்ளது. பிரிக்கப்பட்ட மாவட்டங்களில் வார்டு மறு வரையறை பணிகளை முடித்து, அடுத்த ஆண்டு ஏப்ரலுக்குள் தேர்தலை நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஊரக உள்ளாட்சிகள் அனைத்துக்கும் அன்றாட பணிகள் மற்றும் மக்களுக்கு அடிப்படை வசதிகளை அளிக்க நிதி தேவைப்படுகிறது. மத்திய அரசு அடிப்படை மானியத்தை விடுவிக்காததால் பணிகளை மேற்கொள்ள முடியவில்லை. இது மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
எனவே, 2017-18-ம் ஆண்டுக் கான செயல்பாட்டு மானியம் ரூ.194 கோடியே 78 லட்சம் மற்றும் 2019-20-ம் ஆண்டுக்கான அடிப்படை மானியம் ரூ.2 ஆயிரத்து 369 கோடியே 86 லட்சம் ஆகிய தொகைகளை உடனே விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு கடிதத்தில் தெரிவிக் கப்பட்டுள்ளது.
இந்தச் சந்திப்பின்போது மத்திய இணை அமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோதி, தமிழக ஊரக வளர்ச்சித் துறை செயலர் ஹன்ஸ்ராஜ் வர்மா உள்ளிட்டோர் இருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT