Published : 20 Dec 2019 08:23 AM
Last Updated : 20 Dec 2019 08:23 AM
ரெ. ஜாய்சன்
தூத்துக்குடி பிரையன்ட் நகர் பகுதியைச் சேர்ந்தவர் மா.சங்கர் (33). தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரியில் வரலாற்றுத் துறை உதவி பேராசிரியர். பறையாட்டம், ஒயிலாட்டம், பொய்க்கால் குதிரையாட்டம், கோலாட்டம், கரகாட்டம், சிலம் பாட்டம், தீப்பந்தாட்டம், வீதி நாட கம் என தமிழகத்தின் பண்பாட்டு அடையாளங்களுக்கு தனது, `சகா கலைக் குழு’ மூலம் உயிரூட்டி வருகிறார் சங்கர்.
தென் மாவட்டங்களில் நடை பெறும் அரசு விழாக்கள், மாநாடு கள், கருத்தரங்குகள், அரசியல் கட்சிகளின் மாநாடுகள், கல்லூரி விழாக்கள், கோயில் விழாக்களில், சகா கலைக் குழுவினரின் கிராமிய கலைநிகழ்ச்சிகளை காணமுடி கிறது. இக்குழுவில் எல்கேஜி படிக்கும் மாணவ, மாணவியர் முதல் 75 வயது மூத்த கலைஞர்கள் வரை 80 பேர் உறுப்பினர்கள். இது வரை 10 ஆயிரம் மாணவ, மாணவி யருக்கு நாட்டுப்புற கலைகள் குறித்து பயிற்சி அளித்துள்ளார்.
இதுகுறித்து சங்கர் கூறியதாவது: முக்கூடல் தாளார்குளம் சாந்தப்பனிடம் நாட்டுப்புற கலைகள் குறித்து பயிற்சி பெற்றேன். ஒயிலாட்டக் கலைஞர் கலைமாமணி கைலாசமூர்த்தி, கலைமாமணிகள் பிச்சைக்கனி, சங்கரபாண்டி ஆகியோர் எனக்கு வழிகாட்டிகளாக அமைந்தனர்.
குஜராத் மாநிலத்தில் 2010-ம் ஆண்டு முதல்வராக நரேந்திர மோடி இருந்தபோது, அவரது முன்னிலையில் கலைநிகழ்ச்சி களை நடத்தியுள்ளோம். 2012-ல் டெல்லியில் தமிழ்நாடு இல்லத்தில் கலைநிகழ்ச்சி நடத்தினோம். படிப்பில் அரியர் வைத்திருப்போர், மது, புகை போன்ற பழக்கங்கள் உள்ளவர்களுக்கு சகா கலைக் குழு வில் இடம் கிடையாது. கலைநிகழ்ச்சிகளில் பங்கேற்றாலும் கல்வி பாதிக்கப்படக்கூடாது என்பது எங்களது குறிக்கோள். எங்கள் கல்லூரி நிர்வாகம் எங்களை ஊக் கப்படுத்தி, தேவையான உதவி களை செய்து வருகிறது.
தமிழக அரசின் ‘கலை வளர்மணி’ விருது, மதுரை பாரதி யுவகேந்திரா அமைப்பின் ‘யுவ கலா பாரதி’ விருது, சென்னை லயோலா கல் லூரியின் ‘வீதி கலைஞன்’ விருது உள்ளிட்ட 6 விருதுகளை பெற்றுள் ளேன். பல்வேறு விழிப்புணர்வு கலைநிகழ்ச்சிகளை நடத்தி உள்ளோம். அரசியல் கட்சி நிகழ்ச்சி களில் எங்கள் பாடல்களைத்தான் பாடுகிறோம்.
இலவச பயிற்சி
கலைநிகழ்ச்சிகளை நடத்துவ தோடு, இளம் கலைஞர்களை உருவாக்குவதுதான் எங்களது பிரதான பணி. பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியருக்கு நாட்டுப் புற கலைகளை பயிற்சி அளித்து வருகிறோம். பயிற்சி அளிக்க எங் கள் குழுவில் 10 கலைஞர்கள் உள்ளனர். பயிற்சிக்கு கட்டணம் வாங்குவதில்லை.
மக்கள் மத்தியில் நாட்டுப்புற கலைக்கு நல்ல வரவேற்பு ஏற்பட்டு வருகிறது. திருமணம் உள்ளிட்ட வீட்டு சுபகாரிய நிகழ்ச்சிகளுக்குகூட நாட்டுப்புற கலைநிகழ்ச்சிகளை நடத்த அழைக்கிறார்கள். காணா மல்போன பாவைக்கூத்து, கனி யான் கூத்து, வில்லுப்பாட்டு, கதை சொல்லுதல் போன்ற கலைகளை மீட்க வேண்டும். நாட்டுப்புற கலைகள் தொடர்பான பொருட் களைக் கொண்டு ஒரு அருங்காட் சியகத்தை உருவாக்க வேண்டும் என்பவை எனது கனவுகள்.
கிராமியக் கலைகளை வளர்க்க அனைத்து பள்ளிகளிலும் கலை ஆசிரியர் ஒருவரை நியமிக்க வேண் டும். குறிப்பாக மாற்றுத் திறனாளி களுக்கான சிறப்பு பள்ளிகளில் கலை ஆசிரியர் நியமிக்கப்பட வேண்டும். கலை மூலம் பாடங் களை கற்பிக்கும்போது மாணவர் கள் எளிதில் புரிந்து கொள்கிறார்கள்.
கலை பொருட்களோடு வரும் கிராமிய கலைஞர்களுக்கு அரசு பேருந்துகளில் சலுகை கட்டணம் வழங்க வேண்டும். அரசு பள்ளி களில் ஆண்டுதோறும் ஆண்டு விழாவை நடத்தி கிராமிய கலை நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT