Published : 19 Dec 2019 12:44 PM
Last Updated : 19 Dec 2019 12:44 PM
ஊரக உள்ளாட்சி தேர்தலில் திமுக கணிசமான இடங்களில் வெற்றி பெறுவது உறுதி. இதைத் தடுக்க வாக்கு எண்ணிக்கையில் குளறுபடி நடக்காமல் பார்த்துக்கொள்வதில் கட்சித் தலைமை கவனம் செலுத்த வேண்டும் என திமுக தேர்தல் பொறுப்பாளரிடம் கட்சி நிர்வாகிகள் வலியுறுத்தினர்.
மதுரை புறநகர் தெற்கு மாவட்ட திமுக தேர்தல் பணி குறித்து, கட்சியின் தேர்தல் பொறுப்பாளரான காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக செயலாளர் சுந்தர் ஆய்வு மேற்கொண்டார். திருமங்கலத்திலுள்ள திமுக மாவட்ட அலுவலகத்தில் நடந்த கூட்டத்துக்கு தெற்கு மாவட்டச் செயலாளர் எம்.மணிமாறன் தலைமை வகித்தார். 9 ஒன்றியச் செயலாளர்கள் பங்கேற்றனர்.
வேட்பாளர் தேர்வு, வெற்றி வாய்ப்புக் குறித்து பல்வேறு கேள்விகளை சுந்தர் எழுப்பினார். கட்சித் தலைமைக்கு என்ன தகவல் அளிக்க வேண்டும் எனவும் கேட்டார். இதற்குப் பதில் அளித்த நிர்வாகிகள் பேசுகையில், ‘
ஆளுங்கட்சி வேட்பாளர் தேர்வில் பல குளறுபடிகள் நடந்துள்ளன. ஆனால், திமுக வேட்பாளர்கள் சரியான முறையில் தேர்வு செய்யப்பட்டுள்ளதால் கடும் போட்டியை அளித்து வருகின்றனர். 7 ஒன்றியங்களையும் கைப்பற்றும் சூழல் உள்ளது.
கட்சியினர் நம்பிக்கையுடன் தேர்தல் பணியாற்றி வருகின்றனர். மக்களும் வாக்களிக்கத் தயாரா கவே உள்ளனர். எங்களுக்குள்ள ஒரே பயம் வாக்கு எண்ணிக்கை மீதுதான். கடந்த கால தேர்தல்கள் போல் வாக்கு எண்ணிக்கையில் ஆளுங்கட்சி தனது அதிகாரத்தைக் காட்டிவிடக்கூடாது. இதில், திமுக தலைமை சரியான முன் னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
வாக்கு எண்ணிக்கை மிக நேர்மையாகவும், வெளிப்படைத் தன்மையிலும் இருக்க வேண்டும். இதை உறுதிப்படுத்தினாலே திமுகவின் வெற்றியைத் தடுக்க முடியாது. இதில் கட்சித் தலைமை தான் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதற்கு பதிலளித்து பொறுப் பாளர் சுந்தர் பேசுகையில்,
திமுகவின் வெற்றி மீது நிர்வா கிகளே இவ்வளவு நம்பிக்கையுடன் தெரிவிப்பதைக் கேட்கும்போதே மகிழ்ச்சியாக உள்ளது. இதே வேகத்துடன் பணியாற்றுங்கள். வாக்கு எண்ணிக்கையின்போது கடந்த காலங்களில் குளறுபடிகள் நடந்துள்ளன. அப்போதிருந்த சூழல் வேறு. இந்த ஆட்சிக்கு இன்னும் ஒன்றரை ஆண்டுகாலம்தான் உள் ளது. இதனால் ஆளுங்கட்சியினர் சொல்வதை அதிகாரிகள் அப்படியே கேட்டு தவறு செய்யமாட்டார்கள். வாக்கு எண் ணிக்கையை முழுமையாக வீடியோ எடுக்க உத்தரவிடப்பட் டுள்ளது.
மதுரை மாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினய் நேர்மையாகச் செயல் படுவார் என்பதை அறிந்துள்ளேன். எனினும் இது குறித்து கட்சித் தலைமையின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்படும், என்றார்.
ஆளுங்கட்சிக்கு ஈடுகொடுத்து தேர்தல் செலவு செய்ய சிலரால் முடியாத நிலை உள்ளது. கட்சித் தலைமைப் பண உதவி ஏதும் செய்யுமா என்ற நிர்வாகிகளின் கேள்விக்கு, சிரித்தபடியே பதில் ஏதும் சொல்லாமல் சுந்தர் நழுவிக்கொண்டார். இன்று வடக்கு மாவட்ட திமுக.வினரிடம் பொறுப்பாளர் அன்பரசு ஆய்வு மேற்கொள்கிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT