Published : 18 Aug 2015 08:40 AM
Last Updated : 18 Aug 2015 08:40 AM
சென்னை மாநகராட்சி மேயர் சைதை துரைசாமியை சந்திக்க 15 நாட்களாக அனுமதி கிடைக்க வில்லை என திமுக பொருளாள ரும் கொளத்தூர் தொகுதி எம்எல்ஏவுமான மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
கொளத்தூர் சட்டப்பேரவைத் தொகுதியில் ‘பேசலாம் வாங்க’ என்ற நிகழ்ச்சியின் மூலம் மக்களின் குறைகளை ஸ்டாலின் கேட்டு வருகிறார். அதன்படி, நேற்று முன்தினம் நடந்த நிகழ்ச்சி யில் பொதுமக்களுடன் அவர் கலந்துரையாடினார். அவரிடம் ஏராளமானோர் குறைகளை தெரிவித்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் ஸ்டாலின் கூறியதாவது:
எனது தொகுதியில் 16 முறை ‘பேசலாம் வாங்க’ என்ற தலைப்பில் பொதுமக்களுடன் நேரடியாக உரையாடியிருக் கிறேன். மக்களிடம் பெறப்பட்ட 2,000 மனுக்களில் 850 மனுக் களில் கூறப்பட்ட பிரச்சினைகளை ஓரளவுக்கு முடித்து வைத் திருக்கிறோம்.
குடிநீர் பிரச்சினை தொடர்பாக அதிகபட்சமாக 500 மனுக்கள் வந்துள்ளன. அவற்றை சென்னை மேயருக்கு அனுப்பினோம். ஆனாலும் நடவடிக்கை இல்லை. எனவே, மேயரை நேரில் சந்தித்து மனு கொடுக்க அனுமதி கேட்டிருந்தேன். 15 நாட்களாகியும் அனுமதி கிடைக்கவில்லை. எனவே, இன்னும் சில நாட்களில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை நேரில் சந்தித்து மனு அளிக்க முடிவு செய்துள்ளேன்.
எம்எல்ஏ தொகுதி வளர்ச்சி நிதியில் நான் ஒதுக்கிய ரூ.10 கோடியில் ரூ.1 கோடியே 23 லட்சத்து 86 ஆயிரம் மட்டுமே செலவு செய்யப்பட்டுள்ளது. திமுகவைச் சேர்ந்த ஜெ.அன்பழகன் எம்எல்ஏவாக உள்ள சேப்பாக்கம் தொகுதியிலும் இதேநிலைதான். சென்னை மாநகராட்சி மேயர்தான் இதற்கு காரணம்.
சட்டப்பேரவையில் ஜனநாயக முறைப்படி பேச அனுமதித்தால் தொகுதி பிரச்சினைகளை எடுத்துக் கூறுவோம். சட்டப் பேரவையில் மதுவிலக்கு அறிவிக் கப்பட்டால் திமுக வரவேற்கும்.
இவ்வாறு ஸ்டாலின் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT