Published : 16 Dec 2019 04:42 PM
Last Updated : 16 Dec 2019 04:42 PM
உள்ளாட்சித் தேர்தலுக்காக சட்ட ஆலோசனைக் குழுவை திமுக தலைமைக் கழகம் நியமித்துள்ளது.
இது தொடர்பாக திமுக தலைமைக்கழகம் இன்று (டிச.16) வெளியிட்ட அறிவிப்பில், "திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி, தமிழகத்தில் உள்ள 27 மாவட்டங்களில், நடைபெற உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலையொட்டி, தேர்தல் குறித்து எழும் பிரச்சினைகளுக்கு, தலைமைக் கழகத்துடன் தொடர்பு கொண்டு சட்ட ஆலோசனைகளைப் பெற்று, ஆளும் கட்சியினராலோ, தமிழக தேர்தல் ஆணையத்தாலோ ஏற்படுத்தப்படும் தேர்தல் சீர்கேடுகளை முறைப்படுத்திடவும், அந்தந்த ஊரக உள்ளாட்சிகளில் நடைபெற வேண்டிய தேர்தல் தொடர்பான திமுக பணிகள் குறித்து தெளிவு பெறவும், தலைமைக் கழக சட்ட ஆலோசனைக் குழுத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் தலைமைக் கழகத்தால் நியமிக்கப்படுகின்றனர்.
சட்ட ஆலோசனைக் குழுத் தலைவர்
என்.ஆர்.இளங்கோ, மூத்த வழக்கறிஞர், திமுக சட்ட ஆலோசகர்.
குழு உறுப்பினர்கள்
வழக்கறிஞர் இரா.கிரிராஜன்.
வழக்கறிஞர் எம்.ஷாஜகான்.
வழக்கறிஞர் வி.அருண்.
வழக்கறிஞர் ப.முத்து குமார்.
வழக்கறிஞர் இரா.நீலகண்டன்.
வழக்கறிஞர் ப.கணேசன்.
வழக்கறிஞர் ஜெ.பச்சையப்பன்.
வழக்கறிஞர் ஆர்.கிருஷ்ணராஜா.
வழக்கறிஞர் வி.வேலுசாமி.
மாவட்டக் கழக செயலாளர்கள், வேட்பாளர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள், தோழமைக் கட்சி வேட்பாளர்கள், நிர்வாகிகள் ஆகியோர் தேர்தல் தொடர்பான சந்தேகங்கள், புகார்கள் மற்றும் விளக்கங்களைக் கேட்டறிந்து, தேர்தலை நடத்திட தலைமைக் கழகத்தில் இயங்கும் இப்பணிக்குழுவுடன், தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT