Published : 16 Dec 2019 01:11 PM
Last Updated : 16 Dec 2019 01:11 PM

உள்ளாட்சித் தேர்தல் பணிகள் தீவிரம்: அதிமுக சார்பாக மாவட்ட வாரியான குழுக்கள் அமைப்பு

பிரதிநிதித்துவப் படம்

சென்னை

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் வரும் டிச.27, 30 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளதால், அதிமுகவின் தேர்தல் தொடர்பான அனைத்துப் பணிகளையும் மேற்கொள்வதற்காக, மாவட்ட வாரியாக குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இதற்கான அறிவிப்பை, தமிழக துணை முதல்வரும் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் மற்றும் தமிழக முதல்வரும் அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இன்று (டிச.16) வெளியிட்டனர்.

மாவட்ட வாரியான குழுக்கள்

தஞ்சாவூர் தெற்கு மாவட்டம் - ஆர்.வைத்திலிங்கம் உள்ளிட்டோர்.

சேலம் புறநகர் மாவட்டம் - சி.பொன்னையன், செம்மலை உள்ளிட்டோர்.

கன்னியாகுமரி மேற்கு மாவட்டம் - இன்பதுரை உள்ளிட்டோர்.

திண்டுக்கல் மாவட்டம்- அமைச்சர் சீனிவாசன் உள்ளிட்டோர்.

ஈரோடு மாநகர் மாவட்டம் - அமைச்சர் செங்கோட்டையன் உள்ளிட்டோர்.

ஈரோடு புறநகர் மாவட்டம் - அமைச்சர்கள் செங்கோட்டையன், கே.சி.கருப்பணன் உள்ளிட்டோர்.

திருப்பூர் புறநகர் மாவட்டம் - பொள்ளாச்சி ஜெயராமன், அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர்.

நாமக்கல் மாவட்டம் - அமைச்சர்கள் தங்கமணி, சரோஜா உள்ளிட்டோர்.

கோவை புறநகர் மாவட்டம் மற்றும் கோவை மாநகர் மாவட்டம் - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டோர்.

திருவள்ளூர் மேற்கு மாவட்டம் - அமைச்சர் ஜெயக்குமார், பா.வளர்மதி உள்ளிட்டோர்.

கன்னியாகுமரி கிழக்கு மாவட்டம் - தளவாய்சுந்தரம் உள்ளிட்டோர்.

மதுரை புறநகர் கிழக்கு மாவட்டம் - அமைச்சர் செல்லூர் ராஜூ, ராஜ் சத்யன் உள்ளிட்டோர்.

கடலூர் மேற்கு மாவட்டம் - அமைச்சர் சி.வி.சண்முகம் உள்ளிட்டோர்.

தருமபுரி மாவட்டம் - அமைச்சர்கள் கே.பி.அன்பழகன், நிலோபர் கபீல் உள்ளிட்டோர்.

திருவண்ணாமலை வடக்கு மாவட்டம் - ஜே.சி.டி.பிரபாகர் உள்ளிட்டோர்.

திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் - கோகுல இந்திரா, மைத்ரேயன், அமைச்சர் பாண்டியராஜன் உள்ளிட்டோர்.

ராமநாதபுரம் மாவட்டம் - அன்வர் ராஜா உள்ளிட்டோர்.

மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்டோர்.

தேனி புறநகர் மாவட்டம் - ஜக்கையன், ஓ.பி.ரவீந்திரநாத் குமார் உள்ளிட்டோர்.

கடலூர் மத்திய மாவட்டம் - அமைச்சர் எம்.சி.சம்பத், வைகைச்செல்வன் உள்ளிட்டோர்.

திருவாரூர் மாவட்டம் - அமைச்சர் காமராஜ் உள்ளிட்டோர்.

நாகை மாவட்டம் - அமைச்சர் ஓ.எஸ்.மணியன் உள்ளிட்டோர்.

புதுக்கோட்டை மாவட்டம் - அமைச்சர் சி.விஜயபாஸ்கர் உள்ளிட்டோர்.

தஞ்சாவூர் வடக்கு மாவட்டம் - அமைச்சர் துரைக்கண்ணு, நவநீதகிருஷ்ணன் உள்ளிட்டோர்.

தூத்துக்குடி வடக்கு மாவட்டம் - அமைச்சர் கடம்பூர் ராஜூ, விஜிலா சத்தியானந்த் உள்ளிட்டோர்.

திருச்சி மாநகர் மாவட்டம் - அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் உள்ளிட்டோர்.

திருவண்ணாமலை தெற்கு மாவட்டம் - அமைச்சர்கள் கே.சி.வீரமணி, சேவூர் ராமச்சந்திரன், அக்ரி கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர்.

விருதுநகர் மாவட்டம் - அமைச்சர் ராஜேந்திரபாலாஜி உள்ளிட்டோர்.

கரூர் மாவட்டம் - அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், நிர்மலா பெரியசாமி உள்ளிட்டோர்.

தூத்துக்குடி தெற்கு மாவட்டம் - மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோர்.

சிவகங்கை மாவட்டம் - அமைச்சர் பாஸ்கரன் உள்ளிட்டோர்.

அரியலூர் மாவட்டம் - அமைச்சர் வளர்மதி உள்ளிட்டோர்.

திருப்பூர் மாநகர் மாவட்டம் - யு.ஆர்.கிருஷ்ணன் உள்ளிட்டோர்.

திருச்சி புறநகர் மாவட்டம் - பொன்னுசாமி உள்ளிட்டோர்.

நீலகிரி மாவட்டம் - ஏ.கே.செல்வராஜ் உள்ளிட்டோர்.

கடலூர் கிழக்கு மாவட்டம் - ப.மோகன் உள்ளிட்டோர்.

பெரம்பலூர் மாவட்டம் - அ.அருணாச்சலம் உள்ளிட்டோர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x