Published : 15 Dec 2019 08:49 AM
Last Updated : 15 Dec 2019 08:49 AM

அண்ணாமலையார் கோயிலில் சண்டிகேஸ்வரர் உற்சவத்துடன் கார்த்திகை தீபத் திருவிழா நிறைவு: 17 நாள் விழாவில் பல லட்சம் பக்தர்கள் தரிசனம்

திருவண்ணாமலை

திருவண்ணாமலையில் கடந்த 17 நாட்களாக நடைபெற்று வந்த கார்த்திகை தீபத் திருவிழா சண்டிகேஸ்வரர் உற்சவத்துடன் நேற்று நிறைவடைந்தது.

திருவண்ணாமலை அண்ணா மலையார் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா, காவல் தெய்வமான துர்க்கை அம்மன் உற்சவத்துடன் கடந்த மாதம் 28-ம் தேதி தொடங்கி யது. பின்னர் பிடாரியம்மன் மற்றும் விநாயகர் உற்சவம் நடைபெற்றது.

இதையடுத்து அண்ணாமலை யார் கோயிலில் உள்ள தங்கக் கொடி மரத்தில் கடந்த 1-ம் தேதி கொடியேற்றம் நடைபெற்றதும், 10 நாள் உற்சவம் ஆரம்பமானது. இதில், முக்கிய நிகழ்வாக 63 நாயன்மார்கள் உற்சவம், வெள்ளி தேரோட்டம், பஞ்ச ரதங்களின் பவனி (மகா தேரோட்டம்), பிச் சாண்டவர் உற்சவம் நடைபெற்றது.

இதேபோல், பல்வேறு வாகனங் களில் சந்திரசேகரர் மற்றும் பஞ்ச மூர்த்திகள் மாட வீதியில் வலம் வந்து அருள்பாலித்தனர்.

இதன் தொடர்ச்சியாக, 10-ம் தேதி அதிகாலை 4 மணிக்கு அண்ணா மலையார் கோயிலில் பரணி தீபமும் அன்று மாலை 6 மணிக்கு 2,668 அடி உயரம் உள்ள அண்ணாமலை உச்சியில் மகா தீபமும் ஏற்றப்பட்டது. அதன்பிறகு, ஐயங்குளத்தில் தெப்பல் உற்சவம் கடந்த 11-ம் தேதி தொடங்கியது.

முதல் நாளன்று சந்திரசேகரர், 2-வது நாளன்று பராசக்தி அம்மன் மற்றும் 3-வது நாளன்று முருகரின் தெப்பல் உற்சவம் நடைபெற்றது.

இதற்கிடையில், பக்தர்களை போல், அண்ணாமலையார் கிரிவ லம் வந்து காட்சிக் கொடுத்தார். தொடர்ந்து 17 நாட்களாக நடை பெற்று வந்த கார்த்திகை தீபத் திருவிழா, வெள்ளி ரிஷப வாகனத் தில் நடைபெற்ற சண்டிகேஸ்வரர் உற்சவத்துடன் நேற்று நிறைவு பெற்றது.

கார்த்திகை தீபத் திருவிழாவுக்கு பல லட்சம் பக்தர்கள் வருகை தந்து வழிபாடு செய்தனர். அண்ணா மலை உச்சியில் ஏற்றப்பட்ட மகா தீபத்தை வரும் 20-ம் தேதி வரை தரிசனம் செய்யலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x