Published : 15 Dec 2019 08:12 AM
Last Updated : 15 Dec 2019 08:12 AM

மாற்றுத் திறனாளிகளுக்கான மறுவாழ்வு சேவைகள் மேம்பட்டுள்ளன: ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பெருமிதம்

தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தில் நேற்று நடைபெற்ற ‘ரிஹாபேஸிக்ஸ்’ என்ற மருத்துவ கருத்தரங்கில் ‘டெக்ஸ் புக் ஆஃப் ரிஹாபிலிட்டேஷன்’ என்ற நூலை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் வெளியிட்டார். நிகழ்ச்சியில் பாரதிய வித்யா பவன் சென்னை கேந்திர இயக்குநர் கே.என்.ராமசாமி, தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் சுதா சேஷய்யன், ஃப்ரீடம் டிரஸ்ட் நிறுவனர் மற்றும் நிர்வாக அறங்காவலர் டாக்டர் சுந்தர், ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி ஈ.என்.மூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர். படம்: பு.க.பிரவீன்

சென்னை

மாற்றுத் திறனாளிகளுக்கான மறு வாழ்வு சேவைகள் மேம்பட்டுள் ளன என்று ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தெரிவித்துள்ளார்.

புனர்வாழ்வு மருத்துவத் துறை சார்ந்தவர்களுக்கான கருத்தரங்கத் தொடக்க விழா மற்றும் ஃப்ரீடம் டிரஸ்ட் அமைப்பின் நிறுவனர் டாக்டர் சுந்தர் எழுதிய புனர்வாழ்வு குறித்த பாடநூலின் நான்காம் பதிப்பு வெளியீட்டு நிகழ்ச்சி சென்னை கிண்டியில் உள்ள தமிழ் நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் நேற்று நடை பெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தமிழக ஆளு நர் பன்வாரிலால் புரோஹித் நூலின் முதல் பிரதியை வெளியிட, பல் கலைக்கழகத்தின் துணைவேந்தர் டாக்டர் சுதா சேஷய்யன் பெற்றுக் கொண்டார்.

நிகழ்ச்சியில் ஆளுநர் பன்வாரி லால் புரோஹித் பேசியதாவது:

உடல் குறைபாடுகளால் பாதிக் கப்பட்ட பலர் கடந்த நூற்றாண்டு வரை பல்வேறு சவால்களையும் இன்னல்களையும் எதிர்கொண்டு வாழ வேண்டியிருந்தது. தங்களது அத்தியாவசியத் தேவைகளை நிறைவேற்றக்கூட அடுத்தவரைச் சார்ந்திருக்க வேண்டிய நிலை இருந்தது. ஆனால், தற்போது அப்படி இல்லை.

மருத்துவத் துறையும் தொழில் நுட்பத் துறையும் மேம்பட்டதன் பயனாக தற்போது மாற்றுத் திறனாளிகளுக்கான மறுவாழ்வு சேவைகள் மேம்பட்டிருக்கின்றன. மாற்றுத் திறனாளிகளின் புனர் வாழ்வு நடவடிக்கைகளுக்காக மத்திய, மாநில அரசுகள் பல் வேறு நலத்திட்டங்களை மேற் கொண்டு வருகின்றன.

பாரலிம்பிக் போட்டியில் தங்கப் பதக்கத்தை வென்று தாயகத்தை தலைநிமிர வைத்த மாரியப்பன் தங்கவேலு என பலர் தங்களது தடைகளைக் கடந்து சாதனை படைத்துள்ளனர். இவ்வாறு அவர் பேசினார்.

துணைவேந்தர் டாக்டர் சுதா சேஷய்யன் பேசும்போது, “அனைத்து நோய்களுக்குமே புனர்வாழ்வு மருத்துவம் அவசியம் என்ற நிலை ஏற்பட்டுவிட்டது.அலு வலகத்தில் 8 மணி நேரத்துக்கும் மேல் அமர்ந்தே பணியாற்றுபவர் களுக்குக்கூட இயன்முறை சிகிச்சை போன்ற புனர்வாழ்வு மருத்துவம் இப்போது இன்றியமை யாததாக மாறிவிட்டது. நோய் சார்ந்த மருத்துவம் என்ற நிலை மாறி பணி சார்ந்த மருத்துவம் என்ற நடைமுறை வந்துவிட்டது. அதை உணர்ந்து அனைவரும் செயல்பட வேண்டிய கட்டாயம் எழுந்துள்ளது” என்றார்.

இந்த நிகழ்ச்சியில் ஃப்ரீடம் டிரஸ்ட் அமைப்பின் நிறுவனர் டாக்டர் சுந்தர், பாரதிய வித்யா பவன் சென்னை கேந்திர இயக்கு நர் கே.என்.ராமசாமி, ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி மூர்த்தி உள்ளிட் டோர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x