Published : 14 Dec 2019 01:09 PM
Last Updated : 14 Dec 2019 01:09 PM
பழநி பெரியநாயகியம்மன் கோயில் யானை புத்துணவு முகாமிற்காக இன்று (சனிக்கிழமை) மேட்டுப்பாளையம் அருகேயுள்ள தேக்கம்பட்டிக்கு புறப்பட்டுசென்றது.
ஆண்டுதோறும் தமிழகத்தில் உள்ள கோவில் யானைகளுக்கு தமிழக அரசு மேட்டுப்பாளையம் தெப்பக்காடு எனுமிடத்தில் 48 நாட்கள் புத்துணர்வு முகாம் நடத்திவருகிறது.இந்த ஆண்டிற்கான முகாம் நாளை தொடங்கி 48 நாட்கள் நடக்கிறது.
திண்டுக்கல் மாவட்டம் பழநியிலுள்ள தண்டாயுதபாணிசுவாமியின் உபகோயிலான ஊர்க்கோயில் எனப்படும் பெரியநாயகியம்மன் கோயிலில் கஸ்தூரி யானை உள்ளது.
இந்த யானை ஆண்டுதோறும் புத்துணர்வுமுகாமிற்கு அனுப்பப்பட்டுவருகிறது. இந்த ஆண்டிற்கான புத்துணர்வு முகாம் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகேயுள்ள தேக்கம்பட்டி பகுதியில் நடைபெறவுள்ளதால் அங்கு யானையை அனுப்பிவைக்கும் பணியில் கோயில் நிர்வாகத்தினர் ஈடுபட்டனர்.
இந்நிலையில், நாளை தொடங்கி புத்துணர்வு முகாம் 48 நாட்கள் நடைபெறுகிறது. பழநி கஸ்தூரி யானை புத்துணர்வு முகாமிற்கு செல்வது இது 14 வது முறையாகும். நேற்று காலை லாரி மூலம் ஏற்றப்பட்டு அனுப்பிவைக்கப்பட்டது.
யானையை கால்நடை மருத்துவர்கள் பரிசோதித்தனர். 54 வயதான கஸ்தூரி யானை 4660 கிலோ எடையுடன் உள்ளது. முகாமிற்கு செல்லும் யானையுடன் கால்நடை மருத்துவர் முருகன் தலைமையில் மருத்துவக்குழுவினர் உடன் சென்றுள்ளனர்.
இதேபோல், மதுரை மீனாட்சி அம்மன் கோவில் யானை பார்வதி, (வயது 25) திருப்பரன்குன்றம் யானை தெய்வானை, (வயது 12) அழகர்கோவில் யானை சுந்தரவள்ளி தாயார் (வயது 12) ஆகிய மூன்று யானைகளும் இன்று காலை பூஜை செய்யப்பட்டு லாரிகளில் ஏற்றப்பட்டு தெப்பக்காடு அனுப்பி வைக்கப்பட்டது.
வழியில் யானைகளுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டால் கவனிப்பதற்காக Dr முத்துராமலிங்கம், Dr கங்கா சுதன் ஆகிய 2 கால்நடை உதவி மருத்துவர்கள் உடன் செல்கின்றனர். 48 நாட்கள் நடைபெறும் இம்முகாமில் யானைகள் முன்னதாக எடை பரிசோதனை மற்றும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு முகாமில் சேர்க்கப்படுகின்றன.
:
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT