Published : 14 Dec 2019 08:54 AM
Last Updated : 14 Dec 2019 08:54 AM
தருமபுரம் ஆதீனத்தின் 27-வது குருமகா சந்நிதானமாக ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் பதவியேற் றார். இதற்கான ஞானபீடா ரோஹணம் நேற்று நடைபெற்றது.
நாகை மாவட்டம் மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனத்தின் 26-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ சண்முக தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் கடந்த 3-ம் தேதி முக்தி அடைந்தார். முக்தி அடைந்த பத்தாம் நாளான நேற்று 26-வது குருமகா சந்நிதானத் தின் குருபூஜை விழா நடை பெற்றது.
இதைத் தொடர்ந்து, தருமபுரம் ஆதீனத்தின் 27-வது குருமகா சந்நிதானமாக ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் பதவியேற்கும் விதமான ஞானபீடா ரோஹணம் என்னும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதையொட்டி ஞானபுரீஸ்வரர், தர்மபுரீஸ்வரர் கோயில்களில் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞான சம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் தரிசனம் செய்தார். தொடர்ந்து, 27-வது குருமகா சந்நிதானத்துக்கு ஞான அபிஷேகம் செய்யப்பட்டது.
பின்னர், தருமபுர ஆதீன ஒடுக் கத்தில் 27-வது மகா சந்நிதானம் ஞான பீடத்தில் அமர வைக்கப் பட்டார். அங்கு அவருக்கு ஆதீன மரபுப்படி சிறப்பு பூஜைகளை திருப்பனந்தாள் இளவரசு திருஞானசம்பந்தர் தம்பிரான் சுவாமிகள் செய்து வைத்தார்.
இதைத்தொடர்ந்து, ஆதீன பண்டைய மரபுப்படி ஓலைச் சுவடியில் தங்க எழுத்தாணியால் கையெழுத்திட்டு, 27-வது ஆதீன மாக ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமி கள் பதவியேற்றுக் கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் சுவாமிகள், மயிலாடுதுறை எம்பி ராமலிங்கம் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT