Published : 14 Dec 2019 08:25 AM
Last Updated : 14 Dec 2019 08:25 AM
சட்டப்பேரவை பொதுத்தேர்தலை கருத்தில்கொண்டு, உள்ளாட்சித் தேர்தலில் எந்தக் கூட்டணி கட்சியை யும் புறக்கணிக்க வேண்டாம். அனைவரையும் அரவணைத்து செல்லுங்கள் என்று மாவட்டச் செய லாளர்களுக்கு அதிமுக ஒருங் கிணைப்பாளர்கள் அறிவுறுத்தி யுள்ளனர்.
தமிழகத்தில் பிரிக்கப்பட்ட, புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட் டங்களைத் தவிர்த்து மீதமுள்ள 27 மாவட்டங்களில் ஊரக உள் ளாட்சித் தேர்தல் வரும் 27, 30 ஆகிய தேதிகளில் 2 கட்டமாக நடத்தப்படு கிறது. மீதமுள்ள மாவட்டங்கள் மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் விரைவில் அறிவிக்கப்படும் என தெரிகிறது.
அதிமுகவை பொறுத்தவரை, உள்ளாட்சித் தேர்தல் பணிகளை முன்கூட்டியே தொடங்கிவிட்டது. தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், கூட்டணிக் கட்சிகளான பாஜக, பாமக, தேமுதிக, தமாகா, சமக, மூவேந்தர் முன்னணிக் கழகம், புதிய நீதிக்கட்சி ஆகியவற்றின் பிரதிநிதிகளை அழைத்து பேச்சு வார்த்தை நடத்தியது.
தற்போது ஊரக உள்ளாட்சி களுக்கு மட்டுமே தேர்தல் நடக் கிறது. இதில், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவி களுக்கு கட்சி அடிப்படையில் தேர்தல் நடக்கும். எனவே, இந்தப் பதவிகளுக்கான இடங்களில் கூட்டணி கட்சிகளுக்கு தேவையான இடங்களை ஒதுக்க அதிமுக முன் வந்தது.
அதிமுக மாவட்டச் செய லாளர்களிடம் கூட்டணி கட்சிகளின் பிரதிநிதிகள் பேசி இடங்களை பிரித்துக் கொள்ளலாம் என கூறிய அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள், அதற்கான அதிகாரத்தையும் மாவட்டச் செயலாளர்களுக்கு வழங்கினர்.
கூட்டணி கட்சிகள் புகார்
டிச.16-ம் தேதி வேட்புமனுத் தாக்கல் நிறைவடைய உள்ள நிலை யில், அதிமுகவின் நிர்வாக ரீதி யிலான அனைத்து மாவட்டங் களிலும் வேட்பாளர்களை இறுதி செய்யும் பணி நடந்துவருகிறது. சில மாவட்டங்களில் கூட்டணி கட்சிகளுக்கு சரியான பிரதிநிதித் துவம் தரப்படவில்லை என்றும், தங்கள் கட்சியினர் அதிக அளவில் உள்ள இடங்களை மாவட்டச் செயலாளர்கள் தர மறுப்பதாகவும் அதிமுக தலைமைக்கு புகார்கள் வந்தன.
இதைத் தொடர்ந்து, அதிமுக மாவட்டச் செயலாளர்களுக்கு கட்சியின் ஒருங்கிணைப்பாளர்கள் வாய்மொழியாக சில அறிவுறுத்தல் களை வழங்கியுள்ளனர். இது குறித்து அதிமுக நிர்வாகிகள் கூறியதாவது:
ஊரக உள்ளாட்சிகளுக்கான இடங்களை பிரித்துக் கொடுப்பது மட்டுமே மாவட்டச் செயலாளர்கள் பணி. நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு கூட்டணி கட்சிகள் அளிக்கும் பட்டியலை தலைமைக்கு பரிந் துரையுடன் அளிக்க வேண்டும். அதன்பின், கூட்டணி கட்சிகளுடன் பேசி ஒதுக்கீடு தொடர்பான முடிவை அதிமுக தலைமை எடுக்கும்.
அதிமுகவைப் பொறுத்த வரை 2021-ல் நடக்கும் சட்டப் பேரவை பொதுத் தேர்தல் முக்கிய மானது. எனவே, உள்ளாட்சித் தேர்த லைவிட, சட்டப்பேரவை பொதுத் தேர்தலை கருத்தில்கொண்டு மாவட்ட செயலாளர்கள் செயல்பட வேண்டும் என கட்சித் தலைமை அறிவுறுத்தியுள்ளது.
‘எந்தக் கூட் டணிக் கட்சியையும் ஒதுக்க வேண்டாம். அவர்களிடம் நிலை மையை எடுத்துக்கூறி, நமக்கான வெற்றி வாய்ப்பையும் கணித்து, அவர்களுக்கு போதிய பிரதிநிதித் துவம் கிடைக்கும் வகையில் இடங்களை ஒதுக்க வேண்டும்’ என்று அறிவுறுத்தியுள்ளனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதற்கிடையே, தற்போது தேர்தல் அறிவிக்கப்படாத சென்னை மற்றும் 9 மாவட்டங் களிலும் ஊரக உள்ளாட்சி, நகர்ப் புற உள்ளாட்சிகளுக்கான வேட் பாளர்கள் பட்டியலை தயாரிக்கும் பணியில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். விரைவில், முழுமையான பட்டியல் அதிமுக தலைமைக்கு வழங்கப் படும் என தெரிகிறது.
இதையடுத்து, நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கான தேர்தல் அறிவிப்புக்கு முன்னரே கூட்டணி கட்சிகள் போட்டியிடும் இடங்களை உறுதி செய்து, வேட் பாளர் பட்டியலை வெளியிட அதிமுக தலைமை முயற்சி எடுத்து வருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT