Published : 11 Dec 2019 10:18 AM
Last Updated : 11 Dec 2019 10:18 AM
உள்ளாட்சித் தேர்தல் தொகுதிப் பங்கீடு தொடர்பாக அதிமுகவுடன் பேச்சு நடத்துவதற்காக 27 மாவட்டங்களுக்கும் பாஜக குழு அமைத்துள்ளது.
தமிழக பாஜகவில் உள்ளாட்சித் தேர்தல் கூட்டணி, தொகுதிப் பங்கீடு உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவில் முன்னாள் மாநிலத் தலை வர்கள் இல.கணேசன், சி.பி.ராதா கிருஷ்ணன், தேசிய செயலாளர் எச்.ராஜா உள்ளிட்டோர் இடம் பெற் றுள்ளனர்.
இக்குழுவின் கூட்டம், சென்னை தியாகராய நகரில் உள்ள கட்சித் தலைமை அலுவலகமான கமலால யத்தில் நேற்று நடந்தது. அதில் அதிமுகவுடன் நடத்தப்பட்ட முதல் கட்ட பேச்சுவார்த்தை விவரங்களை பொன்.ராதாகிருஷ்ணன் விளக் கிக் கூறினார். அதைத் தொடர்ந்து அதிமுக மாவட்டச் செயலாளர் களுடன் பேச்சு நடத்தி அதிக இடங் களைப் பெறுவதற்காக தேர்தல் நடக்கும் 27 மாவட்டங்களுக்கும் தலா 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்துக் கான குழுவில் பொன்.ராதா கிருஷ்ணன், திருநெல்வேலி - மாநில துணைத் தலைவர் நயினார் நாகேந் திரன், விருதுநகர் - மாநில பொதுச்செயலாளர் - எஸ்.மோகன் ராஜூலு, மதுரை - மாநிலச் செய லாளர் ஆர்.சீனிவாசன், ராமநாத புரம் - மாநில துணைத் தலைவர் சுப.நாகராஜன், சிவகங்கை - தேசிய செயலாளர் - எச்.ராஜா, கரூர் - முன்னாள் எம்.பி. கார்வேந் தன், அரியலூர் - மாநில செயற் குழு உறுப்பினர் தடா பெரிய சாமி, தஞ்சாவூர் - மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம், நாகை - மாநிலச் செயலாளர் எஸ்.வேதரத்தினம், திருவள்ளூர் - மாநிலச் செயலாளர் கரு.நாக ராஜன், கிருஷ்ணகிரி - மாநிலப் பொதுச்செயலாளர் கே.எஸ்.நரேந் திரன், கோவை, திருப்பூர் - முன் னாள் மாநிலத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், மாநிலப் பொதுச் செயலாளர் வானதி சீனிவாசன், மாநிலப் பொருளாளர் எஸ்.ஆர். சேகர், நீலகிரி - மாநிலச் செயலா ளர் - ஆர்.நந்தகுமார் ஆகியோர் குழுவில் இடம் பெற்றுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT