Published : 06 Dec 2019 09:35 AM
Last Updated : 06 Dec 2019 09:35 AM
மாநில நெடுஞ்சாலைகளில் டோல் கட்டணம் வசூலிப்பது தொடர்பாக தனி விதிகள் எதுவும் இல்லாததால் ஒரு கிலோ மீட்டருக்கு ஒரு டோல் கேட் திறப்பீர்களா என உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
மாநில நெடுஞ்சாலைத் துறை கட்டுப்பாட்டில் மதுரை முதல் திருமங்கலம் அருகே உள்ள கப்பலூர் வரையிலான 27 கிலோ மீட்டர் தூர சுற்றுச்சாலையில் மஸ் தான்பட்டி, சிந்தாமணி, வலை யங்குளம் ஆகிய இடங்களில் புதிய டோல்கேட்கள் திறக்கப்பட்டுள் ளன. இந்த டோல்கேட்களால் மதுரை சுற்றுச்சாலையில் போக்கு வரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது.
இதையடுத்து இந்த டோல்கேட் களை அகற்றக் கோரியும், கட்ட ணம் வசூலிக்கத் தடை கோரியும் மதுரை கே.கே.நகரைச் சேர்ந்த இம் மானுவேல் உயர் நீதிமன்றக் கிளை யில் பொதுநல மனு தாக்கல் செய்தார்.
அதில், ஒரு சுங்கச்சாவடிக்கும், இன்னொரு சுங்கச்சாவடிக்கும் இடையே 60 கிலோ மீட்டர் இருக்க வேண்டும். நகர் பகுதியில் இருந்து 10 கிலோ மீட்டருக்கு அப்பால்தான் டோல்கேட்கள் அமைக்க வேண்டும் என்பன உட்பட பல்வேறு வழிகாட்டு தல்கள், சட்ட விதிகள் உள்ளன. இந்த விதிகளில் ஒன்றைகூடக் கடைப்பிடிக்காமல் புதிதாக 3 இடங் களில் டோல்கேட்கள் திறக்கப் பட்டுள்ளன.
இவை மாநில நெடுஞ்சாலை யில் அமைந்துள்ளன. மாநில சாலை யில் டோல்கேட்கள் அமைப்பது தொடர்பாக எந்த விதியும் இல்லை. அவ்வாறு இருக்கும்போது 27 கி.மீ. தூரத்தில் 3 டோல்கேட்கள் திறக்க மாநில நெடுஞ்சாலைத் துறை அனுமதி வழங்கியது சட்டவிரோதம் என மனுவில் கூறப்பட்டிருந்தது.
வழக்கறிஞர் விஜயராஜா என்ப வரும் சுற்றுச்சாலை டோல்கேட்க ளில் கட்டணம் வசூலிக்கத் தடை கோரி மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுக்கள் நீதிபதிகள் துரை சாமி, ரவீந்திரன் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அபோது, புதிய டோல்கேட்கள் அமைக்கப்பட் டிருக்கும் சாலை தேசிய நெடுஞ் சாலையா?, மாநில நெடுஞ்சா லையா? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். கூடுதல் அரசு வழக்கறி ஞர் சண்முகநாதன், மாநில சாலை யில்தான் புதிய டோல்கேட்கள் திறக்கப்பட்டுள்ளன என்றார்.
தொடர்ந்து நீதிபதிகள் மாநில நெடுஞ்சாலைகளில் ஒரு கிலோ மீட்டருக்கு ஒரு டோல்கேட் திறக்க முடியுமா? என கேள்வி எழுப்பினர். பின்னர் இது தொடர்பாக தமிழக நெடுஞ்சாலைத் துறை, தமிழக சாலை உட்கட்டமைப்பு மேம்பாட்டு கழகக் கண்காணிப்புப் பொறியாளர் ஆகியோர் பதில் அளிக்க உத்தர விட்டு விசாரணையை டிச.11-க்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT