Published : 06 Dec 2019 09:27 AM
Last Updated : 06 Dec 2019 09:27 AM
உள்ளாட்சித் தேர்தல் தொடர் பான பணிகளை மேற்கொள்ள முன்னாள் மத்திய இணை அமைச் சர் பொன்.ராதாகிருஷ்ணன் தலை மையில் 15 பேர் கொண்ட பணிக் குழுவை பாஜக அமைத்துள்ளது.
இது தொடர்பாக பாஜக மாநில அமைப்பு பொதுச்செயலாளர் கேசவ விநாயகன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
உள்ளாட்சித் தேர்தலுக்கான பாஜக பணிக்குழு தலைவராக முன்னாள் மத்திய இணை அமைச் சர் பொன்.ராதாகிருஷ்ணன் நிய மிக்கப்பட்டுள்ளார்.
தேர்தல் பணிக்குழு உறுப் பினர்களாக முன்னாள் மாநிலத் தலைவர்கள் இல.கணேசன், சி.பி.ராதாகிருஷ்ணன், தேசிய செயலாளர் எச்.ராஜா, மாநில பொதுச்செயலாளர்கள் வானதி சீனிவாசன், எஸ்.மோகன்ராஜூலு, கருப்பு முருகானந்தம், கே.எஸ்.நரேந்திரன், மாநில துணைத் தலைவர்கள் சுப.நாகராஜன், நயினார் நாகேந்திரன், சிவகாமி பரமசிவம், மாநிலச் செயலாளர் எஸ்.கே.வேதரத்தினம், மாநில மகளிரணித் தலைவர் ஏ.ஆர்.மகாலட்சுமி, மாநில எஸ்.சி. அணித் தலைவர் எம்.வெங்கடேசன், மாநில செயற்குழு உறுப்பினர் எஸ்.எஸ்.ராமதாஸ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
ஊரக உள்ளாட்சி அமைப்பு களுக்கு வரும் 27, 30 தேதிகளில் தேர்தல் நடக்கவுள்ளது. இதில் ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப் பினர், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு கட்சி ரீதியாக தேர்தல் நடக்கிறது. இந்தப் பதவிகளுக்கு பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை தேர்வு செய்தல், வெற்றி வாய்ப் புள்ள தொகுதிகளை கண்டறிதல், உள்ளிட்ட பணிகளை இக்குழு மேற் கொள்ளும் என்று கூறப்படுகிறது
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT