Published : 04 Dec 2019 08:26 AM
Last Updated : 04 Dec 2019 08:26 AM
பெரம்பலூர் அருகே விதைப்ப தற்காக வைத்திருந்து திருடுபோன 300 கிலோ சின்ன வெங்காயத்தை மீட்டுத்தரக் கோரி விவசாயி ஒருவர் போலீஸில் புகார் அளித்துள்ளார்.
உற்பத்தி பரப்பளவு குறைவு, வேர் அழுகல் நோய் உள்ளிட்ட கார ணங்களால் சின்ன வெங்காயத் துக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட் டுள்ளது. சில்லறை விற்பனையில் ஒரு கிலோ ரூ.120க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இந்நிலையில், பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் அருகே உள்ள கூத்தனூர் கிராமத்தில் 300 கிலோ சின்ன வெங்காயம் திருடு போயுள்ளது. கூத்தனூரைச் சேர்ந்த முத்துகிருஷ்ணன், தனது வயலில் வெங்காயம் விதைப்பு செய்ய முடிவு செய்து அதற்காக 300 கிலோ சின்ன வெங்காயத்தை கிலோ ரூ.120 விலையில் வாங்கி வைத்திருந்தார்.
கடந்த சில தினங்களாக பெய்து வரும் மழையால் விதைப்புக் கேற்ற நிலையில் நிலம் இருப்பதால் நேற்று விதைப்பு செய்யலாம் என முடிவு செய்திருந்தார். இதை யடுத்து, விதை வெங்காய மூட் டைகளை வயலின் ஒரு பகுதியில் நேற்று முன்தினம் வைத்துவிட்டு அதை பிளாஸ்டிக் தார்ப்பாயால் மூடிவைத்திருந்தார்.
இந்நிலையில், நேற்று காலை விதைப்பு பணிக்காக முத்துகிருஷ் ணன் வயலுக்குச் சென்றார். வய லில் வைத்திருந்த விதை வெங் காயத்தை எடுக்கச் சென்றபோது, தார்ப்பாய் மட்டுமே அங்கு கிடந் தது, வெங்காய மூட்டைகளைக் காணவில்லை. விதை வெங்காய மூட்டையை யாரோ திருடிச்சென் றதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
300 கிலோ விதை வெங்கா யத்தை திருடிச் சென்ற மர்ம நபர்க ளைக் கண்டுபிடித்து வெங்கா யத்தை மீட்டுத் தரக் கோரி பாடாலூர் போலீஸில் முத்துகிருஷ்ணன் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸார் விசாரிக்கின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT