Published : 04 Dec 2019 08:23 AM
Last Updated : 04 Dec 2019 08:23 AM

நீலகிரியில் கொட்டித் தீர்த்த கனமழை: பாறைகள் உருண்டு விழுந்ததால் வாகன போக்குவரத்து கடும் பாதிப்பு - மலை ரயில் சேவை 8-ம் தேதி வரை ரத்து 

குன்னூர் - மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் உருண்டு விழுந்த பாறையை துளையிட்டு உடைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள்.

குன்னூர்

குன்னூர் - மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் பாறை உருண்டு விழுந்ததால் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. தொடர்மழை காரணமாக மலை ரயில் சேவை வரும் 8-ம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள் ளது.

நீலகிரி மாவட்டம் உதகை, கோத்தகிரி, குந்தா, குன்னூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த 3 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. நேற்றுமுன்தினம் பெய்த மழையால் குன்னூர்-மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் 12 இடங்களில் மண்சரிவு ஏற்பட்டதோடு, மரங்கள், பாறைகள் சாலையில் விழுந்ததால் குன்னூர் - மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் போக்கு வரத்து நிறுத்தப்பட்டது.

அனைத்து வாகனங்களும் கோத்தகிரி வழியாக திருப்பி விடப் பட்டன. மண் சரிவு அகற்றப்பட்டு, சீரமைப்புப் பணிகள் முடிந்த நிலையில், நேற்று காலை குன்னூர் அருகே காந்திபுரம் சாலையில் ராட்சதப் பாறை விழுந்தது. இதனால் போக்குவரத்து நிறுத் தப்பட்டது.

கோட்டப் பொறியாளர் குழந்தைராஜ் தலைமையிலான ஊழியர்கள் பாறையை உடைக் கும் பணியில் ஈடுபட்டனர். பாது காப்பு கருதி கோத்தகிரி வழி யாக மட்டுமே வாகனங்கள் அனுமதிக்கப்பட்டன.

இதேபோல, குன்னூர்-மேட்டுப் பாளையம் மலை ரயில் பாதை யிலும் பல இடங்களில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால், உதகை-மேட்டுப்பாளையம் இடையேயான மலை ரயில் சேவை வரும் 8-ம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

குன்னூரில் 132 மி.மீ. மழை

குன்னூரில் கனமழை காரண மாக லாஸ் நீர்வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது. நீலகிரி மாவட்டத்தில் அதிக பட்சமாக குன்னூரில் 132 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

நேற்று காலை நிலவரப்படி, உதகையில் 50.8, நடுவட்டத்தில் 15, கல்லட்டியில் 6, கிளன்மார்கனில் 10, குந்தாவில் 85, அவலாஞ்சியில் 26, எமரால்டில் 41, கெத்தையில் 52, கிண்ணக்கொரையில் 33, அப்பர் பவானியில் 8, குன்னூரில் 132, பர்லியாறில் 58, கேத்தியில் 91, கோத்தகிரியில் 72, கோடநாட்டில் 107, கூடலூரில் 4 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x