Published : 04 Dec 2019 07:59 AM
Last Updated : 04 Dec 2019 07:59 AM
சென்னை ஐஐடியில் தற்கொலை செய்து கொண்ட கேரள மாணவி யின் செல்போனில் இருந்த பதிவுகள் உண்மையானவைதான் என்று தடயவியல் சோதனையில் தெரியவந்துள்ளது.
கேரள மாநிலம் கொல்லத்தைச் சேர்ந்தவர் பாத்திமா லத்தீப், சென்னை கிண்டி ஐஐடி வளாக பெண்கள் விடுதியில் தங்கியிருந்த நிலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாத்திமா தற்கொலைக்குப் பின்னர் அவரது செல்போனை, அவரது தங்கை ஆயிஷா அதில் இருந்த பதிவுகளை பார்த்தபோது செல்போனில் ‘மை நோட்’ என்கிற இடத்தில் பாத்திமா சில தகவல் களை பதிவு செய்து வைத்திருப் பதை பார்த்து கடும் அதிர்ச்சி அடைந் தார். அதில், தனது தற்கொலைக்கு பேராசிரியர் சுதர்சன் பத்மநாபன் தான் காரணம் என்று பாத்திமா கூறி யிருந்தார். மேலும், அதில் குறிப் பிட்டிருந்தபடி, அவரது டேப்பை பார்த்தபோது, பேராசிரியர்கள் ஹேமச்சந்திரன் காரா, மிலிந்த் பிராமே ஆகியோரின் பெயர்களை குறிப்பிட்டு இவர்களும் தன்னை கொடுமைப்படுத்தியதாகத் தெரி வித்திருந்தார்.
சென்னை மத்திய குற்றப்பிரிவு கூடுதல் ஆணையர் ஈஸ்வரமூர்த்தி, விசாரணை அதிகாரியும் கூடுதல் துணை ஆணையருமான மெக லீனா ஆகியோரிடம் பாத்திமாவின் செல்போன், டேப், லேப்டாப் ஆகியவற்றை மாணவியின் தந்தை அப்துல் லத்தீப் ஒப்படைத்தார்.
அதில் உள்ள தகவல்கள் உண் மையானவை தானா என்பதை கண்டுபிடிக்க, தடயவியல் சோதனை நடத்தப்பட்டது. சென்னை மயிலாப்பூர் டிஜிபி அலு வலக வளாகத்தில் உள்ள தடயவி யல் ஆய்வகத்தில் வைத்து பாத்தி மாவின் செல்போன் மற்றும் டேப் ஆய்வு செய்யப்பட்டது. இந்த ஆய் வின் அறிக்கை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
அதில், மாணவி பாத்திமாவின் செல்போனில் பதிவு செய்யப்பட் டிருக்கும் தகவல், அவர் தற் கொலை செய்வதற்கு முன்பே பதிவு செய்யப்பட்டிருப்பது உறுதி செய் யப்பட்டுள்ளது. இந்த வழக்கின் முக்கிய ஆதாரமாகவும், மாணவி யின் மரண வாக்குமூலமாகவும் இந்த பதிவு எடுத்துக்கொள்ளப் படும் என்றும் மத்திய குற்றப்பிரிவு போலீஸார் தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT