Published : 04 Dec 2019 07:25 AM
Last Updated : 04 Dec 2019 07:25 AM

திருநங்கை உரிமை பாதுகாப்பு மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் தரக்கூடாது: சென்னை திருநங்கைகள் கூட்டமைப்பு வலியுறுத்தல் 

கோப்புப் படம்

சென்னை 

திருநங்கைகள் உரிமை பாதுகாப்பு மசோதாவுக்கு குடியரசு தலைவர் ஒப்புதல் அளிக்கக்கூடாது என்று சென்னை திருநங்கைகள் கூட்ட மைப்பு வலியுறுத்தியுள்ளது.

இதுதொடர்பாக, அக்கூட் டமைப்பின் நிர்வாகி சபிதா சென் னையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

திருநங்கைகள் உரிமை பாது காப்பு மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு குடியரசு தலை வரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த மசோ தாவில் திருநங்கைகளுக்கான முதன்மை பராமரிப்பாளர் ரத்த சொந்தமாக இருக்க வேண்டும் அல்லது அதற்கு மாற்றாக அரசாங்கத்தால் வழங்கப்பட்ட புனர்வாழ்வு மையங்கள் மட்டும்தான் என்று வரையறை செய்யப்பட்டுள்ளது.

திருநங்கைகளை குடும்பங்கள் ஏற்காத காரணத்தால்தான் வீட்டை விட்டு வெளியேறி வருகிறோம். அவ்வாறு, இருக்க அவர்களிடம் தான் அடைக்கலம் செல்ல வேண் டும் என்றால் பாதுகாப்பற்ற சூழல் தான் ஏற்படும். திருநங்கைகளுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு பற்றி மசோதாவில் குறிப்பிடப்படவில்லை. திருநங்கை களுக்கு எதிரான தாக்குதல் மற் றும் பிற மோசமான குற்றங்களுக் கான தண்டனை அதிகபட்சம் 2 ஆண்டுகள் என்று நிரணயிக்கப் பட்டுள்ளது. இது, பெண்கள் மற் றும் குழந்தைகளுடன் ஒப்பிடுகை யில் திருநங்கைகள் தாழ்ந்த குடிமக்களாக கருதுவதாக அமைந்துள்ளது.

எனவே எஸ்சி, எஸ்டி வன் கொடுமை தடுப்பு சட்டத்தை மைய மாகக் கொண்டு திருநங்கைக ளுக்கு எதிரான அட்டூழியங்களை தடுப்பதற்கு ஒரு சட்டம் வழிவகுக்க வேண்டியது அவசியமான ஒன்றா கும். இந்த மசோதா, 2014-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப் புக்கு எதிராக உள்ளது. அத்தீர்ப் பில், திருநங்கைகளின் வாழ்விடம், உரிமைகள் தொடர்பாக தெளிவாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

எனவே, திருநங்கைகள் உரிமை பாதுகாப்பு மசோதாவுக்கு ஒப்பு தல் அளிக்கக்கூடாது என்று சென்னையில் இருந்து குடியரசு தலைவருக்கு 10 ஆயிரம் கடிதங் களை அனுப்ப உள்ளோம். இதே போல், நாடு முழுவதும் திருநங்கை கள் கடிதங்களை அனுப்ப உள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x