Published : 04 Dec 2019 06:58 AM
Last Updated : 04 Dec 2019 06:58 AM
மதுரை
கழுதைப் பாலை பச்சிளம் குழந் தைகளுக்குப் புகட்டினால் மூளை வளர்ச்சி பாதிக்கும் அபாயம் ஏற்படும் என பச்சிளம் குழந்தைகள் பராமரிப்புத் துறை மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
பிறந்த பச்சிளம் குழந்தை களுக்கு மருத்துவர்கள் முதலில் சத்து மிகுந்த தாய்ப் பாலைத்தான் பரிந்துரைக்கின்றனர். ஆனால், மூடநம்பிக்கையால் கிராமங்களில் குழந்தைகளுக்கு கழுதைப் பால், மாட்டுப் பால், ஆட்டுப் பால் புகட்டு வது அதிகரித்துள்ளது. கழுதைப் பால் கொடுத்தால் குழந்தைகளுக்கு மஞ்சள் காமாலை வராது, தொற்று நோய்கள் அண்டாது என்ற மூட நம்பிக்கையே இதற்கு காரணம்.
மக்களின் இந்த மூடநம்பிக் கையைக் குறிவைத்து பொதி சுமக்கப் பயன்படுத்திய கழுதை களில் பாலைக் கறந்து சிலர் விற்று சம்பாதிக்கத் தொடங்கிவிட்டனர். அதனால், திண்டுக்கல், தேனி மாவட்ட கிராமங்களில் கழுதைப் பால் வியாபாரம் களைகட்டுகிறது.
இந்தியாவில் 42 சதவீத குழந்தை களுக்கு மட்டுமே, பிறந்த ஒரு மணி நேரத்தில் தாய்ப் பால் அளிக்கப்படுவதாகவும், 55 சத வீத குழந்தைகளுக்கு மட்டுமே 6 மாதம் வரை தாய்ப் பால் புகட்டு வதாகவும் ஆய்வுகள் கூறுகின்றன.
இதுகுறித்து மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை பச்சிளம் குழந்தைகள் பராமரிப்புத் துறைத் தலைவர் ஜெ.அசோக்ராஜா கூறிய தாவது:
குழந்தைகளுக்கு முதல் 6 மாதத்துக்கான சிறந்த உணவு தாய்ப் பால்தான். முதல் தடுப்பு மருந்தும்கூட அதுதான். அதில் குழந்தைகளுக்குத் தேவையான ஊட்டச்சத்துகள் உள்ளன. விலங் கினங்களின் பாலில் இந்தச் சத்துகள் குறைவாக இருக்கும். தாய்ப் பாலில் முக்கிய ஊட்டச்சத்தான வே புரோட்டீன் (whey protein) அதிகமாக இருக்கும்.
மாட்டுப் பாலில் கேசீன் (casein protein) என்ற புரதம்தான் அதிகமாக இருக்கும். மாடு, கழுதைகள் போன்ற விலங்குகளின் உடல் பெரியது. அதற்கு அதிகமான புரதம், கொழுப்பு தேவை. அதற் கேற்ப அதிக அளவு சத்துகள் அந்த வகைப் பாலில் இருக்கும். அதே போல், அதன் புரத அமைப்புகள் வேறு மாதிரியாக இருக்கும். மூளை வளர்ச்சிக்குத் தேவை யான பொருட்கள், Docosa hexanoic acid தாய்ப் பாலில் அதிகமாக இருக்கும். மேலும் டாரேன் (Taurine), கிளைசின் (Glycine), சிஸ்டின்(Cysteine) போன்ற அமினோ அமிலங்களும் தாய்ப்பாலில் உள்ளன.
தாய்ப் பாலில் இயல்பாகவே நோய் எதிர்ப்பு சக்திக்கு நிறைய பொருட்கள் உள்ளன. முதலில் குடலில் நோய் எதிர்ப்பு சக்தியை உண்டாக்கும். விலங்குகளின் பாலை குழந்தைகளுக்குக் கொடுத் தால் குடல் மூலம், நிறைய பாக்டீரியா உருவாகி தொற்று நோய் ஏற்பட வாய்ப்புள்ளது. மூளை வளர்ச்சி பாதிக்கும் அபாயம் உள்ளது. ஆனால், தாய்ப் பாலில் உள்ள லைசோசைம்(lysozyme) போன்ற என்சைம்கள், சில வகைப் புரதங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், செரிமானத்துக்கும் உதவும். ஆகையால் கழுதைப் பால் கழுதைக் குட்டிக்கு மட்டுமே. மனிதர்களுக்கு அல்ல.
விலங்குகளுக்கு வரக்கூடிய நோய்கள் வேறு. அந்த நோய் களை தடுக்கக்கூடிய நோய் எதிர்ப்பு சக்திகளே அந்தப் பாலில் கிடைக் கும். அதனால் american academy of pediatrics, Indian academy of pediatrics போன்ற உலகின் அனைத் துக் குழந்தைகள் நல அமைப்பு களும் முதல் 6 மாதத்துக்கு தாய்ப் பால் மட்டுமே கொடுக்க வேண்டும் என அறிவுறுத்துகின்றன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT