Published : 01 Dec 2019 09:17 AM
Last Updated : 01 Dec 2019 09:17 AM
இந்திய சாலைகளில் போதிய அளவில் கட்டமைப்பு வசதிகள் இல்லாதது, ஓட்டுநர் மற்றும் பாதசாரி களின் கவனக்குறைவால் கடந்த ஆண்டில் மட்டும் 22,656 பேர் இறந்துள்ளனர். இது, அதற்கு முந்தைய ஆண்டை ஒப்பிடும்போது 15 சதவீதம் அதிக மாகும்.
சாலை விபத்துகள் மற்றும் இறப்புகள் அதிகரித்து வருவது பொதுமக்கள் மத்தியில் கவ லையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டில் மொத்தம் 4 லட்சத்து 67 ஆயிரத்து 44 சாலை விபத்துகள் நடந்துள்ளன. இதில், 1 லட்சத்து 51 ஆயிரத்து 417 பேர் இறந்துள்ளனர். இதில், அதிகபட்சமாக இருசக்கர வாகன விபத்துகளால் மட்டுமே 55,336 பேர் இறந்துள்ளனர்.
இதேபோல், சாலைகளில் போதிய அளவில் வசதிகள் இல்லாதது, ஓட்டுநர்களின் மற்றும் கவனக்குறைவால் பாதசாரிகள் 22,656
பேர் இறந்துள்ள தாக மத்தியபோக்குவரத்து அமைச்சக புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப் பட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழக போக்கு
வரத்து துறை ஆணையர் சி.சமய மூர்த்தி கூறியதாவது:
கட்டமைப்பு பணிகள்
தமிழ்நாட்டில் சாலை விபத்துகளைக் குறைக்க தமிழக அரசுதொடர்ந்து எடுத்து வரும் ஆக்கப்பூர்வமான நடவடிக்கையால்
20 சதவீத இறப்புகள் குறைந் துள்ளன. பாதசாரிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் முக்கிய சாலைகளில் நடுவில் இருக்கும் தடுப்புச் சுவர்கள்உயரத்தை அதிகப்படுத்துதல், பிரதான சாலைகளில் சாலைகளை கடந்து செல்லும் பாதை அமைக் கும் பணிகள் தொடர்ந்து மேற் கொள்ளப்பட்டு வருகின்றன.
மேலும், மக்கள் அதிகமாகச் செல்லும் முக்கியச் சாலைகளில் சுரங்கப்பாதைகள் அல்லது நடைமேம்பாலங்கள், நடைபாதைகள் அமைப்பது தொடர்பாக சம்பந்தப்பட்ட மாநகராட்சிகள், நகராட்சி களிடமும் வலியுறுத்தியுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.
அதிக வேகம், செல்போன்
இதுதொடர்பாக சென்னை ஐஐடி உதவி பேராசிரியர் ஒருவரிடம் கேட்டபோது, ‘‘ ஒட்டுமொத்த சாலை விபத்துகளுக்கும் 60 சதவீதம் ஓட்டுநர்களின் கவனக்குறைவே காரணமாக இருக்கிறது. அதிலும் இளம் ஓட்டுநர்கள்தான் அதிக அளவில் காரணமாக இருக்கின்றனர்.
அதிகவேகமாக செல்வது முக்கிய காரணமாக இருக்கிறது. சமீபகாலமாக வாகன ஓட்டிகளும் அதிக அளவில் செல்போன் பயன்படுத்திக் கொண்டே செல் கின்றனர்.
மற்றொருபுறம் பாதசாரிகளும் செல்போன் பயன்படுத்திக் கொண்டே சாலை கடந்து செல்வதால் விபத்துகளும், உயிரிழப்புகளும் அதிகரித்து வருகின்றன. பிரதான சாலைகளின் அளவுக்கு ஏற்றவாறு குறைந்தபட்சமாக ஒன்றரை மீட்டரில் இருந்து அதிக பட்சமாக 7 மீட்டர் வரையில் நடைபாதை இருக்க வேண்டும். இதை முழுமையாக செயல்படுத்த சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.
இதுதொடர்பாக சிட்டிசன் கன்சியூமர் அண்டு சிவில் ஆக் ஷன் குரூப் (சிஏஜி) அமைப்பின் மூத்த ஆய்வாளர் என்.சுமணா கூறும்
போது, ‘‘சாலைகளில் பாதசாரி களுக்கு நடைபாதைகள் ஒதுக்கி, வசதியை ஏற்படுத்த வேண்டும். பாதசாரிகளின் உரிமையை பாது
காக்கும் வகையில் விபத்தை ஏற்படுத்துவோர் மீது கூடுதல் அபராதம் வசூல் அல்லது சிறைதண்டனை அளித்தல், சாலைகளை முறையாக வடிவமைக்காத நிறுவனம், பராமரிக்காத நிறுவனம் மீது வழக்கு பதிவு செய்வது உள்ளிட்டவை புதிய சாலை பாதுகாப்பு சட்டத்தின் மூலம் கொண்டுவர வேண்டுமென மத்திய அரசிடம் வலியுறுத்தியுள்ளோம்.
ஸ்மார்ட் சிட்டி போன்ற திட்டங்கள் மூலம் பாதசாரிகள், சைக்கிள் ஓட்டுவதை ஊக்கு விக்க சிறப்பு திட்டங்கள் மேற் கொள்ளப்பட்டு வருகின்றன’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT