Published : 01 Dec 2019 08:29 AM
Last Updated : 01 Dec 2019 08:29 AM

தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு சென்னை ஐஐடியில் வன்கொடுமை: தேசிய எஸ்சி ஆணைய உறுப்பினர் குற்றச்சாட்டு

சென்னை

சென்னை ஐஐடியில் தாழ்த்தப்பட்ட பிரிவு மாணவர்கள் பல்வேறு துன்புறுத்தல்களுக்கு ஆளாவதாக தேசிய எஸ்சி ஆணைய உறுப் பினர் சுவராஜ் வித்வான் தெரிவித் தார்.

சென்னை ஐஐடியில் தாழ்த்தப் பட்ட பிரிவு மாணவர்கள் துன்புறுத் தப்படுவதாகவும் மாணவர் சேர்க்கை மற்றும் பணிநியமனங் களில் இடஒதுக்கீடு புறக்கணிக்கப் படுவதாகவும் தேசிய தாழ்த்தப்பட் டோர் ஆணையத்துக்கு பல்வேறு புகார்கள் வந்தன. இதுதவிர மாணவர்களின் தற்கொலை சம்ப வங்களும் ஐஐடியில் தொடர்கின் றன. இதனால் சென்னை ஐஐடி யில் பயிலும் தாழ்த்தப்பட்ட பிரிவு மாணவர்களின் நிலை பற்றி தெரிந்து கொள்ள தேசிய எஸ்சி ஆணையம் முடிவு செய்தது. அதன் படி எஸ்சி ஆணைய உறுப்பினர் சுவராஜ் வித்வான் கிண்டியில் உள்ள ஐஐடி வளாகத்தில் நேற்று ஆய்வு மேற்கொண்டார். அங்குள்ள மாணவர்கள், பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்களிடம் கருத்து களை கேட்டறிந்தார்.

அதன்பின்னர் சுவராஜ் வித் வான் செய்தியாளர்களிடம் கூறிய தாவது: நம்நாட்டில் உள்ள மற்ற ஐஐடிகளை ஒப்பிடும்போது சென்னை ஐஐடியின் நிலைமை கவலை அளிக்கும் விதமாக உள் ளது. இங்கு தாழ்த்தப்பட்டோருக்கு எதிரான வன்கொடுமைகள் அதிக மாக இருக்கிறது. ஐஐடியில் 2007 முதல் 2017-ம் ஆண்டு வரை 17 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

ஆனால், அதற்கான காரணம் முழுமையாக பெற்றோருக்கு தெரிவிக்கப்படவில்லை. மேலும், இடஒதுக்கீடு முறையும் முழு மையாக பின்பற்றப்படவில்லை. மொத்தமுள்ள 2,322 முதுநிலை அறிவியல் இடங்களில் இது வரை 47 எஸ்சி, 6 எஸ்டி பிரிவு மாணவர்கள் மட்டுமே சேர்ந் துள்ளனர்.

தாழ்த்தப்பட்டோர் மட்டுமின்றி பிற்படுத்தப்பட்ட பிரிவினர்களும் உடல் மற்றும் மனரீதியாக துன் புறுத்தப்படுவதாக மாணவர்கள், ஊழியர்கள் தரப்பில் புகார்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

இந்த விவகாரத்தை பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய மனிதவள மேம்பாட்டு துறை யிடம் கொண்டு செல்லப்படும். மேலும், இதுதொடர்பாக விளக்கம் கேட்டு சென்னை ஐஐடி இயக்கு நருக்கு நோட்டீஸ் அனுப்பப் படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x