Published : 30 Nov 2019 09:12 AM
Last Updated : 30 Nov 2019 09:12 AM
சிசிடிவி கேமரா, ஜிபிஎஸ் கருவி உள்ளிட்ட வசதிகளுடன் கூடிய 100 மின் ஆட்டோக்களின் இயக்கத்தை முதல்வர் பழனிசாமி சென்னையில் நேற்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு:
வெளிநாடுவாழ் தமிழர்கள் மற்றும் முதலீட்டாளர்களிடம் இருந்து தமிழகத்துக்கு முதலீடு களை ஈர்ப்பதற்காக இங்கிலாந்து, அமெரிக்கா, துபாய் நாடுகளுக்கு முதல்வர் பழனிசாமி, அமைச்சர் கள், அதிகாரிகளுடன் கடந்த ஆக.28 முதல் செப்.10-ம் தேதி வரை அரசுமுறை பயணம் மேற் கொண்டார். இதில், ரூ.8 ஆயி ரத்து 835 கோடி மதிப்பில் முதலீடு களை ஈர்த்து, 35 ஆயிரத்து 520-க் கும் மேற்பட்டவர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கும் வகை யில் 41 நிறுவனங்களுடன் புரிந் துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப் பட்டது.
இப்பயணத்தின் நிறைவாக, துபாயில் இந்திய துணைத் தூதரகம் மற்றும் தொழில் தலைவர்கள் கூட்டமைப்பு இணைந்து நடத்திய முதலீட்டாளர்கள் சந்திப்பில் முதல்வர் பங்கேற்றார். அப்போது பெட்ரோல் ஆட்டோக்களை சுற் றுச்சூழலுக்கு உகந்த மின்சார ஆட் டோக்களாக மாற்றி இயக்கும் திட்டத்துக்காக ரூ.100 கோடி முத லீட்டில் 5 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்புகளை உருவாக் கும் வகையில், துபாயின் கேஎம்சி குழுமம் மற்றும் எம் ஆட்டோ எலெக்ட்ரிக் மொபிலிட்டி ஆகிய நிறுவனங்களுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
இந்த புரிந்துணர்வு ஒப்பந் தத்தை செயல்படுத்தும் விதமாக எம் ஆட்டோ எலெக்ட்ரிக் மொபிலிட்டி நிறுவனத்தால் பெட்ரோல் ஆட் டோக்கள் சுற்றுச்சூழலுக்கு மாசு விளைவிக்காத மின்சாரத்தால் இயங்கும் ஆட்டோக்களாக மாற்றி யமைக்கப்பட்டன.
முதல்கட்டமாக சென்னையில் 100 எம்-எலெக்ட்ரிக் ஆட்டோக் களை பொதுமக்கள் பயன்பாட் டுக்கு தொடங்கிவைக்கும் விதமாக 4 ஆட்டோக்களை முதல்வர் பழனிசாமி கொடி யசைத்து தொடங்கி வைத்தார்.
இந்த எம்-எலெக்ட்ரிக் ஆட்டோக் கள் ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் 100 கி.மீ வரை செல்லும் வகையில் வடிவமைக் கப்பட்டுள்ளன. மேலும், இந்த ஆட்டோக்களில் சிசிடிவி கேமரா, ஜிபிஎஸ் வசதி, ஆபத்தான நேரத்தில் பயன்படுத்துவதற்கான பொத்தான், கையடக்க கணினி (டேப்) போன்ற வசதிகள் உள்ளன. மேலும், ‘mauto pride’ என்ற செல்போன் செயலி மூலம் பொதுமக்கள் முன்பதிவு செய்துகொள்ளவும் முடியும். பெரும்பாலான எம்-எலெக்ட்ரிக் ஆட்டோக்களின் ஓட்டுநர்கள் பெண்கள் மற்றும் திருநங்கையர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்ச்சியில், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் எம்.சி.சம்பத், எம்.ஆர். விஜயபாஸ்கர், தலைமைச் செயலர் கே.சண்முகம், தொழில்துறை செயலர் என்.முருகானந்தம், எம் ஆட்டோ குழும தலைவர் அ.மன்சூர் அலிகான், நிர்வாக இயக்குநர் யாஸ்மின் ஜவகர் அலி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT