Published : 30 Nov 2019 08:36 AM
Last Updated : 30 Nov 2019 08:36 AM
பழைய ரூபாய் நோட்டுகளுடன் தவித்த மூதாட்டிகளுக்கு முதியோர் உதவித் தொகை பெறுவதற்கான உத்தரவை ஒரே நாளில் ஆட்சி யர் க.விஜயகார்த்திகேயன் வழங் கினார்.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே பூமலூர் கிராமத்தைச் சேர்ந்த சகோதரிகளான பழனிசாமி ரங்கம்மாள்(82), காளிமுத்து ரங் கம்மாள்(78) ஆகியோர் பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளாக தாங்கள் சேமித்து வைத்திருந்த ரூ.46 ஆயிரத்தை மாற்ற முடி யாமல் தவித்துவருவது குறித்து ஊடகங்களில் செய்தி வெளி யானது.
இதுதொடர்பாக வரு வாய்த்துறையினர் விசாரித்து ஆட்சியருக்கு நேற்று முன்தினம் அறிக்கை அனுப்பினர்.
இதையடுத்து, இரு மூதாட்டி களையும் பல்லடம் வட்டாட்சியர் சிவசுப்பிரமணியம், பூமலூர் கிராம நிர்வாக அலுவலர் மா.கோபி ஆகியோர் திருப்பூர் ஆட்சியர் அலுவலகத்துக்கு நேற்று காலை அழைத்து வந்தனர்.
இருவருக்கும் முதியோர் உதவித்தொகை பெறுவதற்கான உத்தரவை ஆட்சியர் வழங்கினார்.
இதுதொடர்பாக ஆட்சியர் க.விஜயகார்த்திகேயன் செய்தி யாளர்களிடம் கூறும்போது, ‘அவர் கள் பணத்தை இனி மாற்ற இய லாது. இருவருக்கும், சிறப் பான மருத்துவ சிகிச்சை தொடர்ந்து அளிக்க பெருந்துறை மருத்துவக் கல்லூரி முதல்வருக்கு, பரிந்துரை கடிதம் அளித் துள்ளோம்’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT