Published : 29 Nov 2019 09:48 AM
Last Updated : 29 Nov 2019 09:48 AM

ரூ.1000-த்துடன் பொங்கல் பரிசு தொகுப்பு திட்டம்: முதல்வர் இன்று தொடங்கி வைக்கிறார்

சென்னை

தமிழகத்தில் உள்ள அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் சிறப்புப் பரிசாக பச்சரிசி, சர்க்கரை, கரும்பு உள்ளிட்ட பொருட்களுடன் ரூ.1,000 வழங்கும் திட்டத்தை முதல்வர் பழனிசாமி இன்று தொடங்கி வைக்கிறார்.

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, அரிசி குடும்ப அட்டை வைத்திருப்பவர் களுக்கு ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகி றது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சியில் பச்சரிசி, சர்க்கரை, கரும்பு, முந்திரி, திராட்சை உள்ளிட்ட பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.100 வழங்கப்பட்டது. கடந்த பொங்கல் பண்டிகையின்போது பொங்கல் பரிசுத் தொகுப்புடன் சிறப்புப் பரிசாக ரூ.1,000 வழங்கப்பட்டது.

இந்நிலையில், கடந்த 26-ம் தேதி நடந்த கள்ளக்குறிச்சி புதிய மாவட்டத் தொடக்க விழாவில் பேசிய முதல்வர் பழனிசாமி, ‘‘வரும் பொங்கலுக்கும் பரிசுத் தொகுப்புடன் ரூ.1,000 வழங்கப்படும்’’ என்று அறிவித்தார். முதல்வர் அறிவிப்பு வெளியிட்ட அன்றே, இத்திட்டத்தை செயல்படுத்த ரூ.2,363 கோடியே 13 லட்சம் நிதியை ஒதுக்கீடு செய்து கூட்டுறவு மற்றும் உணவுத் துறை உடனடியாக அரசாணை வெளியிட்டது.

இதைத் தொடர்ந்து பொங்கல் பரிசு தொகுப்பு திட்டத்தை முதல்வர் பழனிசாமி இன்று தொடங்கி வைக்கிறார். இதற்கான விழா சென்னை தலைமைச் செயல கத்தில் இன்று காலை நடக்கிறது. இத்திட்டத்தின்படி அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, தலா 20 கிராம் முந்திரி, திராட்சை, 5 கிராம் ஏலக்காய் மற்றும் 2 அடி நீள கரும்பு துண்டு ஆகியவை அடங்கிய பையுடன் ரூ.1,000 ரொக்கப்பணம் வழங்கப்படும்.

தமிழகத்தில் தற்போது 1 கோடியே 95 லட்சத்து 5 ஆயிரத்து 846 அரிசி குடும்ப அட்டைகளும், 10 லட்சத்து 19 ஆயிரத்து 491 சர்க்கரை குடும்ப அட்டைகளும் உள்ளன. இதில் சர்க்கரை குடும்ப அட்டைகளை அரிசி குடும்ப அட்டைகளாக மாற் றிக் கொள்ளலாம் என சமீபத்தில் உணவுத்துறை அறிவித்தது. இவ்வாறு மாற்றிக் கொள்ள விண் ணப்பிப்பதற்கு இன்று கடைசி நாளாகும். அதேநேரம், இரண்டு வகையான குடும்ப அட்டைக ளுக்கும் சேர்த்தே பொங்கல் பரிசு தொகுப்புத் திட்டத்துக்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x