Published : 29 Nov 2019 08:35 AM
Last Updated : 29 Nov 2019 08:35 AM
பொங்கல் பரிசுத் தொகுப்பில் வழங் கப்படும் முந்திரி, திராட்சை மற்றும் ஏலக்காய் ஆகியவற்றை பொட்டல மிட பிளாஸ்டிக் உறைகளை பயன் படுத்தக் கூடாது. பரிசுப் பணத்தை ரூ.500 தாள்களாக மட்டுமே வழங்க வேண்டும் என்று கூட்டுறவு சங் கங்களின் பதிவாளர் கு.கோவிந் தராஜ் அறிவுறுத்தியுள்ளார்.
கடந்த ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1,000 சிறப்பு பரிசுடன் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டது. அதுபோல் வரும் 2020-ம் ஆண்டும் ரூ.1,000 ரொக்கப் பணத்துடன் பொங்கல் பரிசு தொகுப்பாக தலா ஒரு கிலோ பச்சரிசி மற்றும் சர்க்கரை, தலா 20 கிராம் முந்திரி, திராட்சை, 5 கிராம் ஏலக்காய் மற்றும் 2 அடிநீள கரும்பு ஆகியவை வழங்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்தார். இத்திட்டத்தை முதல்வர் இன்று காலை தொடங்கி வைக்கிறார்.
இந்நிலையில், இத்திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாக கூட்டுறவு சங்கங்களின் பதி வாளர் கு.கோவிந்தராஜ், அனைத்து மண்டல இணைப்பதிவாளர்களுக் கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கை யில் கூறியிருப்பதாவது:
நியாயவிலைக் கடைகளை நடத்தும் கூட்டுறவு சங்கங்களே பொங்கல் பரிசு தொகுப்பு வழங் குவதற்கு தேவையான அரிசி, சர்க் கரை உள்ளிட்டவற்றை கிடங்கு களில் இருந்து கடைகளுக்கு வழங்க வேண்டும். கரும்பு, முந் திரி, திராட்சை, ஏலக்காய் போன்ற வற்றின் தேவையை கணக்கிட்டு கூட்டுறவு நியாயவிலைக் கடை களை நடத்தும் சங்கங்கள் மூலம் கொள்முதல் செய்ய வேண்டும். கரும்பு கொள்முதல் செய்வதற்கு மாவட்ட ஆட்சியர், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர், வேளாண்துறை இணை இயக்குநர் உள்ளிட்டோர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
கொள்முதல் செய்யப்படும் கரும்பு, ஏலக்காய், முந்திரி, திராட்சை போன்றவை தரமாக உள்ளதையும், குடும்ப அட்டை தாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பின் தரம் மற்றும் அளவு சரியாக உள்ளதையும் அனைத்து மண்டல இணைப்பதிவாளர்களும் உறுதி செய்ய வேண்டும்.
முந்திரி, திராட்சை, ஏலக்காய் கொள்முதல் செய்யப்பட்டு உரிய அளவுகளில் பொட்டலங்களாக தயார் செய்யப்பட வேண்டும். பொட்டலமிட பிளாஸ்டிக் உறையை பயன்படுத்தக் கூடாது. பழுப்பு நிற காகித உறைகளில் மட்டுமே பொட்டலமிட வேண்டும்.
பொங்கல் பரிசுத் தொகை ரூ.1,000 வழங்குவதற்காக சம்பந்தப் பட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாண் இயக்குநர்களை தொடர்பு கொண்டு தேவையான தொகைக்கு இரண்டு ரூ.500 தாள்கள் வீதம் வங்கியின் கிளைகளில் இருப்பு பேணப்படுவதை உறுதி செய்ய வேண்டும். பொங்கல் பரிசு தொகுப்புத் திட்டம் தொடங்கப்படும் நாள் தொடர்பாக உரிய அறிவு ரைகள் வழங்கப்பட்டதும், அந் நாளில் இருந்து அனைத்து நியாய விலைக்கடைகளிலும் விநியோகிக் கப்பட வேண்டும். மாவட்ட விழாவுக் காக நிறுத்தி வைக்கக் கூடாது.
500 குடும்ப அட்டைகளுக்கு மேல் உள்ள கடைகளில் சுழற்சி முறையில் தெருக்கள் அல்லது பகுதி வாரியாக பொங்கல் பரிசு வழங்கப்படும் என்பதை விளம்பரப் பலகைகளில் எழுதி காட்சிப்படுத்த வேண்டும். ஆயிரம் குடும்ப அட்டைகளுக்கு மேல் உள்ள கடைகளில் 3 பணியாளர்களை நியமிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT