Published : 29 Nov 2019 08:10 AM
Last Updated : 29 Nov 2019 08:10 AM
சென்னை தி.நகர் சரவணா எலைட் நகைக்கடை அதிபரை மிரட்டி ரூ.1 கோடி கேட்ட 5 வழக்கறிஞர்கள் தொழில் செய்ய தடை விதித்து பார் கவுன்சில் நடவடிக்கை எடுத் துள்ளது.
சென்னை தி.நகரில் உள்ள சரவணா எலைட் நகைக்கடை உரி மையாளரான சிவஅருள்துரையிடம் 16 பேர் கொண்ட கும்பல் ரூ.1 கோடி கேட்டு கடைக்கு சென்று மிரட்டியுள்ளது. இதில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் 10 பேரை கடை ஊழியர்கள் பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர். போலீஸாரின் விசார ணையில் இதில் 5 பேர் சென்னையைச் சேர்ந்த இளம் வழக்கறிஞர்கள் என்பது தெரியவந்தது.
இந்த சம்பவத்தில் ஈடுபட்ட வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தமிழ்நாடு பார் கவுன்சிலில் புகார் செய்யப் பட்டது.
இந்நிலையில் இந்த 5 வழக்கறி ஞர்களையும் நீதிமன்றங்கள் மற்றும் தீர்ப்பாயங்களில் ஆஜராகவும், வழக்கறிஞராக தொழி்ல் செய்யவும் தடை விதித்து பார் கவுன்சில் தலைவர் பி.எஸ்.அமல்ராஜ் நடவ டிக்கை எடுத்துள்ளார்.
இதுதொடர்பாக தமி்ழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் செயலர் சி.ராஜாகுமார் வெளி யிட்டுள்ள அறிவிப்பில், ‘‘சென்னை யைச் சேர்ந்த வழக்கறிஞர்களான ஜெகதீஸ்வரன், ராம், அமா னுல்லா, முருகன், சுந்தரபாண்டிய ராஜன் ஆகியோர் வழக்கறிஞர் களாக தொழில்புரிய தடைவிதிக் கப்படுகிறது’’ என்று தெரிவித் துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT