Published : 29 Nov 2019 08:05 AM
Last Updated : 29 Nov 2019 08:05 AM
பின்லாந்து கல்விக் குழுவினர் தங்கள் முதல்கட்ட சுற்றுப் பயணத்தை முடித்துக்கொண்டு இன்று தங்கள் நாட்டுக்கு திரும்பு கின்றனர்.
தமிழக பள்ளிக்கல்வித் துறை சார்பில் அமைச்சர் செங் கோட்டையன், செயலாளர் பிரதீப் யாதவ் ஆகியோர் சமீபத்தில் பின்லாந்து நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டனர். அப்போது அங்குள்ள கல்வி முறை குறித்து கேட்டறிந்தனர். இதைத்தொடர்ந்து பின்லாந்து நாட்டு கல்விக் குழு இரு வார பயணமாக தமிழகம் வந்தது. தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் உள்ள அரசுப் பள்ளிகளை பார்வை யிட்டு ஆசிரியர்கள் கற்பிக்கும் வழிமுறை, மாணவர்களின் கற்றல் திறன் தொடர்பாக ஆய்வு நடத்தியது. அதன்பின் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டத்தை சேர்ந்த 150 ஆசிரியர்களுக்கு பின்லாந்து கல்விக் குழு கற்பித்தல் முறை குறித்து பயிற்சி அளித்தது.
இதன் தொடர்ச்சியாக சென்னை சேத்துப்பட்டில் உள்ள கிறிஸ்தவ கல்லூரி மேல்நிலைப் பள்ளியில் கல்வி முறை குறித்து அவர்கள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது வகுப்பறைக்கு நேரில் சென்று மாணவர்களுடன் அமர்ந்து ஆசிரியர்கள் கற்பித்தல் முறையை அறிந்து கொண்டனர். பின்னர் மாணவர்களுடனும் கலந்துரையாடினர். தொடர்ந்து கற்பித்தல் பணிகள் இடையே மாணவர்களுடன் அவ்வப்போது உரையாடிக்கொண்டே இருக்க வேண்டும் என பின்லாந்து கல்விக் குழு ஆசிரியர்களுக்கு அறிவுரை வழங்கியது.
இதையடுத்து பின்லாந்து கல்விக் குழு தங்கள் முதல்கட்ட சுற்றுப்பயணத்தை முடித்து கொண்டு இன்று தங்கள் நாட்டுக்கு திரும்புகின்றனர். அதற்கு முன் தங்கள் சுற்றுப்பயண அனுபவங்களை அறிக்கையாக தயாரித்து அதிகாரிகளிடம் வழங்க உள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT