Published : 28 Nov 2019 05:37 AM
Last Updated : 28 Nov 2019 05:37 AM
மாமல்லபுரத்தில் உள்ள கடற்கரை கோயில் மற்றும் ஐந்து ரதம் ஆகிய கலைச் சின்னங்களை மாலை 6 மணிக்கு மேல் அருகில் சென்று கண்டு ரசிக்க தொல்லியல் துறை தடை விதித்துள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம், மாமல்ல புரத்தில் பல்லவ மன்னர்களின் சிற்பக் கலைகளான கடற்கரை கோயில், ஐந்து ரதம் உள்ளிட்ட குடைவரை சிற்பங்கள் அமைந்துள் ளன. இவற்றுக்கு யுனெஸ்கோ நிறுவனத்தின் அங்கீகாரம் மற்றும் மத்திய அரசின் புவிசார் குறியீடும் வழங்கப்பட்டுள்ளது. மேலும், இச்சிற்பங்களை கண்டு ரசிக்க வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் அதிகம் வந்து செல்வதால் சர்வ தேச சுற்றுலாத் தலமாகவும் விளங்கி வருகிறது.
இந்நிலையில், கடந்த அக்டோ பர் மாதம் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோர் மாமல்லபுரத்தில் நேரில் சந்தித்து, பேச்சுவார்த்தை நடத்தியதுடன், மாமல்லபுர கலைச் சின்னங்களை கண்டு ரசித்து புகைப் படங்களும் எடுத்துக்கொண்டனர். இரு தலைவர்களின் வருகையை யொட்டி கடற்கரை கோயில், ஐந்து ரதம், வெண்ணெய் உருண்டைப் பாறை உள்ளிட்ட சிற்பங்களை இரவு நேரத்திலும் பொதுமக்கள் கண்டு ரசிக்கும் வகையில் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட் டிருந்தன. இதையொட்டி இரவு 9 மணிவரை கலை சின்னங்களை கண்டு ரசிக்கலாம் என தொல்லியல் துறை அறிவித்தது
இந்நிலையில், இரவு 6 மணிக்கு மேல் கலைச் சின்ன வளாகங்க ளுக்கு செல்லும் சுற்றுலாப் பயணி கள் இரவு நேரத்தை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி பல்வேறு சட்டவிரோத செயல்களில் ஈடு படுவதாக கூறப்படுகிறது. மேலும், கலைச் சின்னங்களில் உள்ள நந்தி, சிங்கம், யானை ஆகிய கற் சிற்பங்களின் மீது அமர்ந்து புகைப்படும் எடுப்பது, அவற்றை சேதப்படுத்தும் செயல்களில் ஈடு படுவதும் தெரியவந்தது. எனவே, கலைச் சின்னங்களின் பாதுகாப்பு கருதி சுமார் 10 அடி தொலைவில் நின்று கலைச் சின்னங்களை சுற்று லாப் பயணிகள் கண்டு ரசிக்கலாம் என்றும், அருகில் சென்று கண்டு ரசிக்க தடை விதிப்பதாகவும் தொல் லியல் துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, மாமல்லபுரம் தொல்லியல்துறை அதிகாரிகள் கூறியதாவது: மாமல்லபுரத்தில் தொல்லியல் துறையின் பராமரிப் பில் உள்ள பல்லவ மன்னர் களின் கலைச் சின்னங்கள், பாது காக்கப்பட்ட கலைச் சின்னங்க ளாகவே அறிவிக்கப்பட்டுள்ளன. இருப்பினும், சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசிக்க அனுமதிக்கப்பட் டுள்ளது.
இந்நிலையில், இரவு நேரங்களில் கலைச் சின்ன வளாகங்களுக்கு செல்லும் சுற்று லாப் பயணிகள், இருள் சூழ்ந்த அந்தப் பகுதியை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு தவறான செயல்களில் ஈடுபடு கின்றனர். மேலும், கலைச் சின்னங் களை சேதப்படுத்தும் வகையிலும் செயல்படுகின்றனர். இரவு 6 மணி முதல் 9 மணிவரையில் பாதுகாப்பு கருதி அருகில் சென்று ரசிக்க தடை விதித்துள்ளோம். சுற்றுலாப் பயணிகளை கண்காணிப்பதற் கென்றே கூடுதலான பாதுகாவலர் களையும் பணியில் அமர்த்தி உள்ளோம் என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT