Published : 18 Aug 2015 09:03 AM
Last Updated : 18 Aug 2015 09:03 AM

வந்தவாசி அருகே ரூ.10 லட்சம் நகைகள் கொள்ளை: போலீஸ்காரரை தாக்கிவிட்டு கும்பல் ஓட்டம்

வந்தவாசி அருகே நகைக் கடையி ல் ரூ.10 லட்சம் மதிப்புள்ள நகைகளை கொள்ளையடித்த கும்பல், ரோந்து சென்ற போலீஸ் காரர் உட்பட 2 பேரை தாக்கிவிட்டு தப்பிச் சென்றது.

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே தெள்ளாரில் வசிப்பவர் தினேஷ். இவர், அதே ஊரில் உள்ள பஜார் வீதியில் துணிக்கடை, நகைக்கடை மற்றும் நகை அடகுக்கடை நடத்தி வருகி றார். இவரது கடை அருகே உள்ள கூட்டுறவு வங்கி வழியாக, தெள்ளார் போலீஸ்காரர் பாபு, இளைஞர் காவல் படையைச் சேர்ந்த புஷ்பராஜ் ஆகியோர் நேற்று அதிகாலை ரோந்து சென்றனர்.

அப்போது, வங்கி அருகே கையில் தடியுடன் மனநிலை பாதிக் கப்பட்டவர்போல் ஒருவர் இருந் துள்ளார். அவரிடம் போலீஸ்காரர் பாபு விசாரிக்க முயன்றபோது, கையில் இருந்த தடியால் தாக்கி, ‘போலீஸ் போலீஸ்’ என்று கூச்சலிட்டார். அவரது சத்தம் கேட்டதும், தினேஷின் நகைக்கடையில் இருந்து 6 பேர் வெளியே வந்து போலீஸ்காரர் உட்பட 2 பேரையும் கற்களால் தாக்கிவிட்டு தப்பி ஓடினர். அதில், அவர்கள் இருவரும் காயமடைந் தனர்.

இதையடுத்து, தெள்ளார் போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்றனர். பின்னர், நகைக்கடை உரிமையாளர் தினேஷ் வரவழைக் கப்பட்டார். கடைக்கு உள்ளே சென்று பார்த்தவர், 200 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டதாக தெரிவித்தார். காவல்துறையினரின் தொடர் கேள்விகளுக்கு பிறகு, 25 பவுன் நகை, 12 கிலோ வெள்ளி, ரூ.60 ஆயிரத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்துள்ளதாக தெரிவித்துள்ளார். இதன் மதிப்பு ரூ.10 லட்சமாகும்.

கொள்ளை சம்பவம் நடை பெற்ற நகைக்கடைக்கு சென்று வேலூர் சரக டிஐஜி தமிழ்சந்திரன் மற்றும் காவல் கண்காணிப்பாளர் பொன்னி ஆகியோர் பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும், கைரேகை நிபுணர்கள் வரவழைக் கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப் பட்டன. தெள்ளார் போலீஸார் வழக்கு பதிவு செய்து 7 பேரை தேடி வருகின்றனர்.

நகைக்கடையில் நடைபெற்ற கொள்ளை சம்பவத்தில், பெருமளவில் தங்கம், வெள்ளி நகைகள் கொள் ளையடிக்கப் பட்டிருப்பதாகவும், காவல்துறையின் நெருக்கடி கார ணமாக குறைத்து மதிப்பீடு காட் டப்படுவதாகவும் கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x