Published : 26 Nov 2019 08:09 AM
Last Updated : 26 Nov 2019 08:09 AM

தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று அணைகள் பாதுகாப்பு மசோதா நிறுத்திவைப்பு: முல்லை பெரியாறில் பணிகள் மேற்கொள்ள அனுமதி

டெல்லியில் மத்திய அமைச்சர்களை தமிழக அமைச்சர்கள் ஜெயக்குமார், தங்கமணி, அதிமுக எம்.பி.க்கள் நேற்று சந்தித்தனர். பின்னர், நாடாளுமன்ற வளாகத்தில் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

சென்னை

தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று அணைகள் பாதுகாப்பு மசோ தாவை மத்திய அரசு நிறுத்திவைத் துள்ளது.

அணைகள் தொடர்பான கண் காணிப்பு, ஆய்வு, பராமரிப்பு போன்ற பணிகளை மேற்கொள்ள வும், தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையத்தை அமைக்கவும், அணைகள் பாதுகாப்பு சட்ட மசோ தாவை கொண்டுவர மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

தமிழக அரசு ஆரம்பம் முதலே இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரு கிறது. ஆனால், மக்களவையில் இந்த மசோதா கடந்த ஆகஸ்ட் டில் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா பற்றி நடந்துவரும் கூட்டத்தொடரில் மாநிலங்களவை யில் விவாதிக்கப்பட்டது.

இந்நிலையில், டெல்லியில் மத்திய ஜல்சக்தி துறை அமைச் சர் கஜேந்திரசிங் ஷெகாவத்தை தமிழக அமைச்சர்கள் டி.ஜெயக் குமார், பி.தங்கமணி மற்றும் ஆர்.வைத்திலிங்கம் தலைமையிலான அதிமுக எம்.பி.க்கள் குழுவினர் நேற்று சந்தித்தனர். ‘தமிழக நலனுக்கு எதிரான அணைகள் பாதுகாப்பு மசோதாவில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும்’ என்று கோரி மனு அளித்தனர்.

இந்நிலையில், அணைகள் பாது காப்பு மசோதா தள்ளிவைக்கப் படுவதாக மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் தெரி வித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழக அமைச்சர் டி.ஜெயக் குமார் தலைமையில் எம்.பி.க்கள் குழுவினர் சந்தித்து, ‘முல்லை பெரியாறு அணை நிர்வாகம், பராமரிப்பு தொடர்பாக தற்போது உள்ள உரிமைகளை மாற்றக் கூடாது. இயக்கம், பராமரிப்பு, தண்ணீர் உரிமை தமிழகத்துக்கு உரியது’ என்று தெரிவித்தனர்.

கடந்த 2010-ல் திருத்தி அமைக்கப்பட்ட அணைகள் பாது காப்பு மசோதாவை பொறுத்தவரை கேரளாவின் மாநில அணைகள் பாதுகாப்பு நிறுவனத்தின் அதி காரம் முல்லை பெரியாறு உள் ளிட்ட தமிழக அணைகளை கட்டுப் படுத்தாது.

தமிழக அரசு நீண்ட நாட்களாக நிறுத்தி வைத்துள்ள முல்லை பெரியாறு அணையின் கொள்ளளவை உயர்த்துவதற்கான பணிகளை தொடர்ந்து மேற்கொள் ளலாம். தமிழக அரசு அந்த அணையை தினசரி பராமரிக்க தேவையான மின்சாரம், சாலை அனுமதி மற்றும் இதர உதவிகளை கேரள அரசு வழங்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

‘மாநிலங்களவையில் இந்த மசோதா குறித்து விவாதம் நடை பெறாது. தமிழக அரசின் கோரிக் கையை ஏற்று அணைகள் பாது காப்பு மசோதா நிறுத்திவைக்கப்பட் டுள்ளது’ என்று மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x