Published : 25 Nov 2019 09:52 AM
Last Updated : 25 Nov 2019 09:52 AM
கோவை
கோவை மாநகரில் செல்வபுரம், செட்டி வீதி, ஒப்பணக்கார வீதி, வெரைட்டிஹால் சாலை, கெம்பட்டி காலனி, வைசியாள் வீதி, ராஜ வீதி, ஆர்.எஸ்.புரம், கிராஸ்கட் சாலை உட்பட பல்வேறு இடங்களில், 45 ஆயிரம் எண்ணிக்கையில் நகைப்பட்டறைகள் மற்றும் நகை உற்பத்தி நிறுவனங்கள் உள்ளன. இங்கு லட்சத்துக்கும் மேற்பட்டோர் பணிபுரிகின்றனர். இதில், நகை உற்பத்தி நிறுவனங்களின் எண் ணிக்கை மட்டும் 20 ஆயிரத்துக்கும் மேல் இருக்கும். இவர்கள் வாடிக் கையாளர்களின் விருப்பத்துக்கு ஏற்ப, நகைகளை வடிவமைத்து விற்பனை செய்து வருகின்றனர். இவர்களிடம் உள்ளூர் மட்டுமின்றி, வெளி மாவட்டங் கள், வெளி மாநிலங்களை சேர்ந்த வாடிக்கையாளர்களும் உள்ளனர்.
இங்குள்ள நகை உற்பத்தியாளர் கள் வடிவமைக்கும் ஆபரணங் களை, பெரும்பாலும் பேருந்து மூலமாக எடுத்துச் சென்றுதான் வெளி மாநிலங்களில் உள்ள வாடிக்கையாளர்களிடம் ஒப் படைக்கின்றனர். ஒருமுறை செல்லும்போது, குறைந்தபட்சம் ரூ.40 லட்சம் முதல் ரூ.3 கோடி அளவு வரை நகைகளை எடுத்துச் செல்கின்றனர்.
நகை உற்பத்தியாளர்கள் தரப்பில்‘‘பேருந்துகளில் எடுத்துச் செல்லும் நகைகளை குறிவைத்து, வடமாநில கொள்ளையர்கள் திருட்டில் ஈடுபடுகின்றனர். பேருந்துகளில் காவல்துறையினர் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும். கடந்த குறிப்பிட்ட ஆண்டுகளில் மட்டும், கோவையில் ஏறத்தாழ ரூ.6 கோடி மதிப்புக்கு 10 திருட்டு சம்பவங்கள், சென்னையில் ரூ.15 கோடி மதிப்புக்கு 40 திருட்டு சம்பவங்கள், சேலத்தில் ரூ.2 கோடி மதிப்புக்கு 3 திருட்டு சம்பவங்கள் நடந்துள்ளன.
பேருந்துகளில் நகை திருடப்பட் டது தொடர்பாக புகார் அளித்தா லும், காவல்துறையினர் விரைவாக நடவடிக்கை எடுப்பதில்லை. நீண்ட இழுபறிக்கு பின்னரே வழக்குப் பதிவு செய்கின்றனர். பாதிக்கப்பட்ட நகை வியாபாரிகளே, குற்றவாளி களை தேடிப்பிடித்து காவல்துறை யிடம் ஒப்படைக்க வேண்டிய சூழல் உள்ளது’’ என்று கூறப்படுகிறது.
ஓபன் டிக்கெட்
கோவையை சேர்ந்த நகைப் பட்டறை உரிமையாளர் தியாக ராஜன் கூறும்போது, ‘‘ஆம்னி பேருந்துகளில் கொண்டு செல்லப் படும் நகைகளை குறிவைத்து, வடமாநிலக் கொள்ளையர்களின் கொள்ளை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதில், 50 பேர் அடங்கிய கும்பல் ஈடுபடுகிறது. சமீபத்தில், கோவையில் இருந்து பெங்களூருவுக்கு எடுத்துச் செல் லப்பட்ட ரூ.44 லட்சம் மதிப்பிலான நகைகளை, உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த கொள்ளையர்கள் திருடிச் சென்றனர். பாதிக்கப்பட்ட நகை உற்பத்தியாளர்கள், தாங்களாக சிலர் ஒன்று சேர்ந்து உத்தரப்பிர தேசம் சென்று, அங்குள்ள காவல்துறையினர் உதவியோடு குற்றவாளிகளை பிடித்து, கோவை காவல்துறையினரிடம் ஒப்படைத் துள்ளனர்.
ஆம்னி பேருந்துகளில் சிசிடிவி கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும். முறையான விவரங்கள் கொடுத்து ஆம்னி பேருந்துகளில் முன்பதிவு செய்வது போல், கடைசி நேரத்தில் ‘ஓபன் டிக்கெட்’ அளித்தும் பயணிகளை ஏற்றுகின் றனர். இந்த வழியை பயன்படுத்தி, வட மாநிலக் கொள்ளையர்கள் பேருந்துகளுக்குள் நுழைகின்றனர். இதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என்றார்.
மாநகர காவல்துறையின் குற்றப் பிரிவு உயர் அதிகாரி ஒருவர் கூறும் போது, ‘‘பேருந்துகளில் தங்க நகை களை எடுத்துச்செல்லும்போது, எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மற்றவர்கள் சந்தேகப்படும்படி, பொது இடங்களில் அடிக்கடி திறந்து பார்க்கக்கூடாது என நகை வியா பாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள் ளது. திருட்டு, கொள்ளை சம்பவங் களை தடுக்க ஆம்னி பேருந்து நிலையங்களில், இரவு நேரங்களில் கண்காணிப்பு தீவிரமாக மேற் கொள்ளப்படுகிறது’’ என்றார்.
மாநகர காவல்துறையின் குற்றப் பிரிவு துணை ஆணையர் உமா கூறும்போது, ‘பேருந்துகளில் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய, கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் என, நகைப்பட்டறை உரிமையாளர்கள் மனு அளித்துள்ளனர். இதை காவல்துறை மட்டும் செய்ய முடியாது. மேலும், பேருந்துகளின் உட்புறத்தில் கண்காணிப்பு கேமரா பொருத்துவது, பயணிகளின் தனிப் பட்ட சுதந்திரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் எனக் கூற வாய்ப் புண்டு. திருட்டு சம்பவங்களை தடுக்க கண்காணிப்பு தீவிரப்படுத் தப்பட்டுள்ளது,’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT