Published : 25 Nov 2019 09:00 AM
Last Updated : 25 Nov 2019 09:00 AM
சென்னை மந்தைவெளிப்பாக் கத்தில் சிறுநீரகம் சார்ந்த பிரச்சினைகள் மற்றும் புராஸ்டேட் புற்றுநோய் இலவச மருத்துவ முகாம் நேற்று நடைபெற்றது. இந்த முகாமில் 50 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் புராஸ்டேட் புற்றுநோய் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்று கியூரி மருத்துவமனை இயக்குநர் டாக்டர் அனந்தகிருஷ்ணன் சிவராமன் தெரிவித்தார்.
சென்னை துரைப்பாக்கத்தில் உள்ள சென்னை யூராலஜி மற்றும் ரோபாடிக்ஸ் இன்ஸ்டிடியூட் (CURI - கியூரி) மருத்துவமனை சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மாதத்துக்கு இரண்டு முறை இலவச மருத்துவ முகாம்களை நடத்தி வருகிறது. அந்த வகையில் சென்னை மந்தைவெளிப்பாக்கம் பகுதியில் கல்யாண் நகர் அசோசி யேஷனுடன் இணைந்து ‘சிறுநீரகம் சார்ந்த பிரச்சினைகள் மற்றும் புராஸ்டேட் புற்றுநோய்’ குறித்த இலவச விழிப்புணர்வு மருத்துவ முகாமை நேற்று நடத்தியது.
கியூரி மருத்துவமனையின் தலைவர் டாக்டர் சிவராமன் முகாமுக்கு தலைமைத் தாங்கினார். மருத்துவமனையின் இயக்குநரும், சிறுநீரகவியல் மற்றும் ரோபோடிக் அறுவை சிகிச்சை துறையின் இயக்குநருமான டாக்டர் அனந்த கிருஷ்ணன் சிவராமன், கல்யாண் நகர் அசோசியேஷன் தலைவர் டாக்டர் எஸ்.எம்.சீனிவாசன், செய லாளர் டி.ஆர்.பிரகாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முகாமுக்கு வந்திருந்த100-க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு சிறுநீரகம் சார்ந்த பிரச்சினைகள் மற்றும் புராஸ்டேட் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு, ஆலோசனைகள், பரிசோதனைகள் மற்றும் சிகிச்சை முறைகள் குறித்துடாக்டர்கள் விரிவாக எடுத்துரைத்தனர்.
இலவச பரிசோதனை
பொதுமக்களின் சந்தேகங் களுக்கும் டாக்டர்கள் பதில் அளித் தனர். சிறுநீரக பரிசோதனை, ரத்த பரிசோதனை மற்றும் புராஸ்டேட் புற்று நோய்க்கான ரத்த பரிசோதனைகள் இலவசமாக செய்யப்பட்டன.
புராஸ்டேட் புற்றுநோய் குறித்து டாக்டர் அனந்தகிருஷ்ணன் சிவரா மன் பேசும்போது, “பெண்களுக்கு எப்படி மார்பக புற்றுநோய் வருகிறதோ, அதேபோல் ஆண் களுக்கு புராஸ்டேட் புற்றுநோய் வருகிறது. மார்பக புற்றுநோய்க்கு ஏற்பட்டுள்ள விழிப்புணர்வைப் போல், புராஸ்டேட் புற்றுநோய்க்கு விழிப்புணர்வு ஏற்படவில்லை.
புராஸ்டேட் புற்றுநோயை சாதாரண ரத்த பரிசோதனை மூலம் கண்டுபிடித்து விடலாம். இந்தப் புற்றுநோயை ஆரம் பத்தில் கண்டுபிடித்தால் எளிதாக குணப்படுத்த முடியும். அதனால், 50 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் கண்டிப்பாக புராஸ்டேட் புற்றுநோய் பரிசோதனை செய்துக் கொள்ள வேண்டும்.
தந்தைக்கு புராஸ்டேட் புற்றுநோய் பாதிப்பு இருந்தால், மகனுக்கு இந்த புற்றுநோய் வருவதற்கு அதிகம் வாய்ப்புள்ளது” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT