Published : 25 Nov 2019 08:33 AM
Last Updated : 25 Nov 2019 08:33 AM

குழந்தைகளின் வளர்ச்சியை கண்காணிக்கும் இயந்திரங்களை அனைத்து அங்கன்வாடி மையங்களுக்கும் நவம்பர் இறுதிக்குள் வழங்க உத்தரவு

கோப்புப் படம்

சென்னை 

குழந்தைகளின் வளர்ச்சியை கண் காணிக்கும் இயந்திரத்தை அனைத்து அங்கன்வாடி மையங் களுக்கும் இம்மாத இறுதிக்குள் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் 54,439 அங்கன்வாடி மையங்கள் உள்ளன. இந்த மையங்களை அங்கன்வாடி பணியாளர்கள், உதவியாளர்கள் நிர்வகிக்கின்றனர். இவர்கள் மூலம் 6 வயது வரை உள்ள குழந் தைகளுக்கு சத்துணவு, சுகாதாரம், முன்பருவக் கல்வி ஆகியவை வழங்கப்படுகின்றன.

அங்கன்வாடி மையங்களில் குழந்தைகளின் வளர்ச்சி, ஆரோக் கியத்தை கண்காணிக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரு கின்றன. இதன் ஒரு பகுதியாக, குழந்தைகளின் உயரத்தை அள விடும் நவீன கருவி, எடை எடுக் கும் நவீன கருவி உள்ளிட்டவை அடங்கிய வளர்ச்சி கண்காணிப்பு இயந்திரங்கள் 18,573 மையங் களுக்கு வழங்கப்பட்டுள்ளன. 35,866 மையங்களுக்கு அவற்றை வழங்கும் பணி நடந்து வருகிறது.

இதுதொடர்பாக ஒருங் கிணைந்த குழந்தை வளர்ச்சி பணி கள் துறை அதிகாரிகள் கூறிய தாவது:

குழந்தைகள் உயரம் குறைவாக இருத்தல், உடல் மெலிவு, எடை குறைவு ஆகிய பாதிப்புகளை குறைக்கும் நோக்கிலேயே வளர்ச்சி கண்காணிப்பு இயந்திரங் கள் வழங்கப்பட்டு வருகின்றன. ஏற்கெனவே வழங்கப்பட்ட மையங்களில் அவை பயன்படுத் தப்பட்டு வருகின்றன.

உடல்நல பரிசோதனை

மற்ற மையங்களுக்கும் வளர்ச்சி கண்காணிப்பு இயந்திரங் களை இம்மாத இறுதிக்குள் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. வளர்ச்சி கண்காணிப்பு இயந்திரங்கள் முழுமையாக வழங்கப்பட்ட பிறகு, குறிப்பிட்ட கால இடைவெளியில் குழந்தைகளின் உடல்நலம் பரி சோதிக்கப்படும். குழந்தைகளின் தேவைக்கு ஏற்ப ஊட்டச்சத்தான உணவுகள் வழங்கப்படும். இதன் மூலம் குழந்தைகளின் ஆரோக் கியம் பாதுகாக்கப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x