Published : 23 Nov 2019 10:27 AM
Last Updated : 23 Nov 2019 10:27 AM
மதுரை
உள்ளாட்சித் தேர்தல் பணிகளில் அதிமுக, திமுக, பாஜக, காங்கிரஸ், அமமுக உள்ளிட்ட கட்சிகள் தீவிரம் காட்டிவரும் நிலையில் மதிமுகவினர் ஆர்வம் காட் டாமல் உள்ளனர். தேர்தல் தேதி அறிவிக்கட்டும் பார்க்கலாம் என அக்கட்சி நிர்வாகிகள் தெரிவித் தனர்.
உள்ளாட்சித் தேர்தல் தேதியை அறிவிக்க தமிழ்நாடு தேர்தல் ஆணையம் ஆயத்தமாகி வரு கிறது. இதையறிந்த ஆளுங் கட்சியான அதிமுக தேர்தல் பணியை முதன் முதலில் தொடங் கியது. போட்டியிட விரும்பும் கட்சியி னரிடம் விருப்ப மனுக்களைப் பெற்று வருகிறது. மேயர், நகராட்சி, பேரூராட்சித் தலைவர் களைத் தேர்வு செய்ய மறைமுகத் தேர்தல் நடைபெறும் என அறிவிக் கப்பட்டுள்ளதால் மதுரையில் அமைச்சர்கள், எம்எல்ஏக்களின் ஆதரவாளர்கள் போட்டிபோட்டு விருப்ப மனுக்களை அளித்துள் ளனர். இதேபோல் முக்கிய எதிர்க் கட்சியான திமுகவும் கட்சியினரிடம் விருப்ப மனுக்களைப் பெற் றுள்ளது. மேலும், பாஜக, காங்கிரஸ், தேமுதிக போன்ற கட்சி கள் உள்ளாட்சித் தேர்தல் ஆலோ சனைக் கூட்டங்களை நடத்தி விருப்ப மனுக்களைப் பெற்றுள்ளன.
ஆனால், திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் மதிமுக உள்ளாட்சித் தேர்தல் பணியை இன்னும் தொடங்கவில்லை. தமிழகத்தில் சென்னை, கோவை, திருப்பூர் மதுரை, கரூர், ஈரோடு, நெல்லை, கன்னியாகுமரி உட்பட சில மாவட்டங்களில் அக்கட்சிக்கு ஓரளவு வாக்கு வங்கி உள்ளது. இருப்பினும், தொண்டர்கள், நிர்வாகிகள் மத்தியில் உள் ளாட்சித் தேர்தல் பற்றிய பேச்சே அடி படவில்லை. ஆர்வம் இல்லாமல் உள்ளனர். கட்சியின் பொதுச் செய லாளர் வைகோவும் இதுவரை எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.
இது குறித்து மதிமுக நிர்வா கிகள் சிலர் கூறியதாவது:
தேர்தல் தேதி அறிவிக்கும் முன் கூட்டணி பற்றியெல்லாம் எங்கள் பொதுச் செயலாளர் வைகோ பேசமாட்டார். முதலில் தேர்தல் நடக்குமா என்பதே சந்தேகம். தேர்தல் தேதி அறிவித் தால் கூட்டணி பற்றி பேசுவதில் அர்த்தம் இருக்கும். அதன்பின் தேர்தல் வியூகம் பற்றி பொதுச் செயலாளர் அறிவிப்பார். மதுரை யில் மதிமுகவுக்கென வெற்றி வாய்ப்புள்ள சில வார்டுகள் உள்ளன. அதில் போட்டியிட முயற்சிப்போம். ஆளுங்கட்சியே உள்ளாட்சித் தேர்தலைச் சந்திக்க தயங்கும் நிலையில்தான் உள்ளது.
வறுமைக்கோட்டுக்கு கீழ் வசிக்கும் மக்களுக்கு ரூ.2 ஆயிரம் வழங்கும் திட்டம் மற்றும் பொங்கல் பரிசு ரூ.1000 வழங்கிய பிறகு உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவிக்கப்படலாம். தேதி அறிவிக்கட்டும் பின்னர் பார்க்கலாம். தேதி அறிவித் தால் பணியை உடனே தொடங்கி விடுவோம், என்று கூறினர்.
மதிமுக நகர் மாவட்ட செயலாளர் பூமிநாதன் கூறுகையில், முதல் கட்டமாக உள்ளாட்சித் தேர்தல் ஆலோசனைக் கூட்டம் நடத்தி, தேர்தல் பணி குறித்து கட்சியின் தலைமைக்குத் தகவல் அனுப்பி உள்ளோம். தேர் தல் தேதி அறிவித்த பிறகே எங்களது பொதுச் செயலாளரும் கூட்டணித் தலை மையிடம் பேசுவார். எத்தனை வார்டுகள் என்பதைப் பொருத்து, வெற்றி வாய்ப்புக்கான வார்டுகளை கேட்டுப் பெறுவோம், என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT