Published : 17 Nov 2019 12:31 PM
Last Updated : 17 Nov 2019 12:31 PM
இந்திய பிரதமர் நரேந்திர மோடி- சீன அதிபர் ஜி ஜின்பிங் சந்திப்புக்கு பிறகு மாமல்லபுரம் வருவதற்கு சீன சுற்றுலாப் பயணிகள் மத்தியில் ஆர்வம் அதிகரித்துள்ளதாகவும், தற்போதுவரை 2 லட்சம் பேர் விசா கேட்டு விண்ணப்பித்துள்ளதாகவும் சுற்றுலாத் துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் சென்னை, விழுப் புரம், கடலூர், காஞ்சிபுரம், வேலூர், தஞ்சாவூர் மாவட்டங்களில் உள்ள சுற்றுலாத் தலங்களில் பணிபுரியும் சுற்றுலா வழிகாட்டிகளுக்கு தமிழக சுற்றுலாத் துறையின் சார்பில் அங்கீகார அட்டை வழங்குவது தொடர்பான நேர்காணல் நேற்று மாமல்லபுரத்தில் உள்ள சுற்றுலா அலுவலகத்தில் நடைபெற்றது.
சுற்றுலாத் துறையின், சென்னை தலைமை அலுவலக வெளியீட்டு அலுவலர் கஜேந்திரகுமார், மாமல்லபுரம் சுற்றுலாத் துறை அதிகாரி எஸ்.சக்திவேல், சுற்றுலா கமிட்டி உறுப்பினர் வழக்கறிஞர் பழனி முருகேசன் ஆகியோர் மாமல்லபுரம் சுற்றுலா வழிகாட்டிகளிடம் தமிழக சுற்றுலாத் துறை சார்பில் அங்கீகார அடையாள அட்டை வழங்குவதற்கான நேர்காணலை நடத்தினர்.
வழிகாட்டிகள் 120 பேர் தேர்வு
இந்த நேர்காணலில் பலமொழிகள் பேசும் திறன், கல்வித் தகுதி, முன் அனுபவம் உள்ளிட்ட தகுதி அடிப்படையில் அங்கீகார அடை யாள அட்டை பெறுவதற்கான வழிகாட்டிகள் 120 பேர் கமிட்டி மூலம் தேர்வு செய்யப்பட்டனர். அப்போது சுற்றுலாத் துறை அலுவலர் எஸ்.சக்திவேல் பேசியதாவது:
தமிழ்நாட்டுக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்குச் சுற்றுலா தளங்களின் வரலாற்றையும், பெரு மைகளையும் கூறுவதற்கு வழிகாட்டி கள் பல மொழிகள் தெரிந்தவ ராகவும், நுணுக்கமான ஆற்றல் பெற்றவராகவும் இருக்க வேண்டும். குறிப்பாக பிரதமர் மோடி, சீன அதிபர் வருகைக்குப் பிறகு மாமல்ல புரத்துக்கு சுற்றுலாவில் சர்வதேச அங்கீகாரம் கிடைத்துள்ளது. தற் போது சுற்றுலாப் பயணிகளின் வருகையும் அதிகரித்துள்ளது.
இன்னும் 2 மாதங்களில் 2 லட்சம் சீன நாட்டுப் பயணிகள் இங்கு வர உள்ளதாகத் தகவல் வந்துள்ளது. சீனாவில் உள்ள இந்திய தூதரகத்தில் 2 லட்சம் பேர் விசா கேட்டு விண்ணப்பித்துள்ளனர். இதனால் மாமல்லபுரத்தில் உள்ள சுற்றுலா வழிகாட்டிகள் சீன மொழியை கற்க வேண்டும் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT