Published : 17 Nov 2019 10:27 AM
Last Updated : 17 Nov 2019 10:27 AM
சென்னையில் தியாகராய நகரைத் தொடர்ந்து மயிலாப்பூர், வேளச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் நடைபாதை வளாகம், சீர்மிகு சாலைகள் அமைப்பதற்கான சாத்தியக் கூறுகள் குறித்து முதல்கட்ட ஆய்வுப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக ஐடிடிபி நிறுவன திட்டமிடல் பிரிவு முதுநிலை மேலாளர் அஸ்வதி திலீப் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் சீர்மிகு நகர (ஸ்மார்ட் சிட்டி) திட்டத்தின்கீழ் சென்னை தியாகராய நகர் பாண்டிபஜாரில் ரூ.39.86 கோடி மதிப்பீட்டில் கட்டப் பட்டுள்ள நடைபாதை வளாகம், ரூ.19.11 கோடியில் அமைக்கப் பட்டுள்ள 23 சீர்மிகு சாலைகளை முதல்வர் பழனிசாமி மக்கள் பயன்பாட்டுக்கு தொடங்கி வைத்தார். இத்திட்டம் குறித்து ஐடிடிபி நிறுவன திட்டமிடல் பிரிவு முதுநிலை மேலாளர் அஸ்வதி திலீப் சென்னையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
சென்னையின் முக்கிய வணிக மையமான தியாகராய நகர் பாண்டி பஜாரில் போக்குவரத்து நெரி சலைத் தவிர்க்கவும் மக்கள் வந்து செல்ல வசதியாக வணிகர்களுக்கு தடையின்றி நடைபாதை வளாகம் அமைக்கும் திட்டம் உருவாக்கப் பட்டது.
அதன்படி, பனகல் பூங்கா முதல் தணிகாசலம் சாலை வரை 730 மீட்டர், தணிகாசலம் சாலை முதல் போக் சாலை வரை 380 மீட்டர், போக் சாலை முதல் அண்ணா சாலை வரை 564 மீட்டர் என 3 கட்டங்களாக நடைபாதை வளாகம் அமைக்கும் பணிகள் நடக்கின்றன. இதில் பனகல் பூங்கா முதல் தணிகாசலம் சாலை வரையும், தணி காசலம் சாலை முதல் போக் சாலை வரையும் பணிகள் முடிக்கப் பட்டுள்ளன. சாலையின் இருபுறமும் சுமார் 10 மீட்டருக்கு அமைக்கப் பட்டுள்ள நடைபாதை வளாகத்தில் மழைநீர் வடிகால், மின்சாரம், தொலைபேசி கட்ட மைப்பு, குடிநீர் மற்றும் புதை சாக்கடை குழாய்கள் என முழுமையான சாலையாக கட்ட மைக்கப்பட்டுள்ளன.
சுற்றுச் சுவர்களில் வண்ணமிகு ஓவியங்கள், குழந்தைகளுக்கான விளையாட்டு உபகரணங்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான வசதி, போட்டரி வாகன மற்றும் வாடகை சைக்கிள் வசதி, முதி யோர் அமரும் வகையில் வண்ண மயமான இருக்கைகள் அமைக்கப் பட்டுள்ளன. மரக்கன்றுகளும் நடப்பட்டுள்ளன.
இதேபோல், வாகன நிறுத்து மிடங்களுக்குத் தீர்வு காணும் வகையில் மொத்தம் 14 இடங் களில் நிறுத்துமிடங்கள் அமைக்கப் பட்டுள்ளன. ஒரு மணிநேரத்துக்கு காருக்கு ரூ.20, இருசக்கர வாகனத் துக்கு ரூ.5 என கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
இதைத் தொடர்ந்து, அண்ணா நகர், மயிலாப்பூர், தண்டையார் பேட்டை, அடையார், வேளச்சேரி, நுங்கம்பாக்கம் ஆகிய இடங் களிலும் நடைபாதை வளாகம் அமைப்பது மற்றும் சீர்மிகு சாலைகள் அமைப்பது குறித்து முதல்கட்ட ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT