Published : 17 Nov 2019 10:13 AM
Last Updated : 17 Nov 2019 10:13 AM
சென்னை யானைகவுனி பாலம் பழுதடைந்ததால் அதை இடிப்பதற்கான பணி கள் நேற்று தொடங்கின. அதற்காக அந்த சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்ட தால் வாகன ஓட்டிகள் அவதிக் குள்ளாயினர்.
பேசின் பிரிட்ஜ் ரயில் நிலையம் மற்றும் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் இடையே வால்டாக்ஸ் சாலை, ராஜா முத்தையா சாலை ஆகியவற்றை இணைக்கும் யானைகவுனி சாலையின் குறுக்கே ரயில்வே மேம் பாலம் உள்ளது. கட்டி 80 ஆண்டுகளுக்கும் மேலான இப்பாலத்தின்கீழ் 8 ரயில் பாதைகள் அமைக்கப்பட்டுள் ளன. இப்பாலம் தற்போது வலுவிழந்துள்ளது. அதனால் இதை இடித்துவிட்டு, புதிய பாலம் கட்ட முடிவானது. இதன்படி, தண்டவாளங் களுக்கு மேல்புறம் ரயில்வே நிர்வாகமும் இருபக்க சாய்வு தள சாலைகளை மாநகராட்சி யும் நிர்வாகமும் தயார் நிலை யில் உள்ளன.
2017 நவம்பர் மாதம் கன ரக வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டு ஆட்டோக்கள், இருசக்கர வாகனங்கள் மட் டும் அனுமதிக்கப்பட்டன. பாலம் வழியாகச் செல்லும் உயர் மின்னழுத்த கேபிள்கள் சேதம் அடையும் என்பதால், புதிய கேபிகள் பதிப்பது தொடர்பான பிரச்சினை மின் துறை மற்றும் ரயில்வே நிர் வாகம் இடையே கடந்த 2 ஆண்டுகளாக நீடித்து வந் தது. தற்போது சிக்கல் தீர்ந்த நிலையில், பாலத்தை இடிப்பதற்கான ஆயத்த பணிகளை ரயில்வே நிர்வாகம் நேற்று தொடங்கியுள்ளது.
அதற்காக அந்த பாலத் தில் போக்குவரத்து திடீ ரென நிறுத்தப்பட்டது. அத னால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாயினர். முதற் கட்டமாக உயர் மின்னழுத்த கேபிள்களை மாற்றும் பணி களை மின் துறை மேற் கொண்டு வருகிறது. அதைத் தொடர்ந்து பாலத்தை இடிக் கும் பணிகள் மேற்கொள்ளப் பட உள்ளன.
இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: யானைகவுனி பாலம் தற்போது 50 மீட் டர் நீளத்தில் உள்ளது. அதை இடித்துவிட்டு 150 மீட்டர் நீளத் தில் ரயில்வே நிர்வாகம் சார்பில் புதிய பாலம் கட்டப்பட உள்ளது. அப்பணிகள் ஜன வரியில் தொடங்க இருப்ப தாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. பாலம் அமைக்கும் பணிகள் நிறை வடைந்த நிலையில், மாநக ராட்சி சார்பில் ரூ.26 கோடியே 45 லட்சம் மதிப்பீட்டில் பாலத் தின் மேற்கு புறம் 250 மீ, கிழக்கு புறம் 180 மீட்டர் சாய்வுதள சாலை அமைக் கும் பணிகள் மேற்கொள் ளப்படும். மாநகராட்சி சார் பில் மேற்கொள்ளப்படும் பணி சுமார் ஓராண்டு காலம் நடைபெற வாய்ப்புள்ளது.
இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.
கனரக வாகன போக்கு வரத்து நிறுத்தப்பட்ட நிலை யில் வால்டாக்ஸ் சாலை, பேசின்பாலச் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் நிலவியது. தற்போது பாலம் மூடப்பட்டதைத் தொடர்ந்து அந்தச் சாலைகளில் மேலும் போக்குவரத்து நெரிசல் அதிகரிக்க வாய்ப்புள்ளது. அதனால் பாலம் அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று பொது மக்கள் வலியுறுத்தியுள் ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT