Published : 25 Aug 2015 09:39 AM
Last Updated : 25 Aug 2015 09:39 AM
முதுநிலை சட்டப் படிப்பான எல்.எல்.எம். கலந்தாய்வு சென்னை டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரியில் நாளை நடக்கிறது என்று சட்டக் கல்வி இயக்குநர் நா.சு.சந்தோஷ்குமார் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் சென்னை, மதுரை, திருச்சி, கோயம்புத்தூர் மற்றும் திருநெல்வேலி அரசு சட்டக் கல்லூரிகளில் முதுநிலை சட்டப் படிப்பான எல்.எல்.எம். பயிற்றுவிக்கப்படுகின்றன. இந் நிலையில், 2015 - 2016-ம் கல்வி ஆண்டு எல்.எல்.எம். மாணவர் சேர்க்கைக்கான ஒற்றைச் சாளர முறை கலந்தாய்வு வரும் 26-ம் தேதி (நாளை) காலை 9 மணிக்கு சென்னை பிராட்வேயில் உள்ள டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரியில் நடைபெற உள்ளது. கட் ஆப் மதிப்பெண் விவரம் அனைத்து அரசு சட்டக் கல்லூரிகளிலும் வெளியிடப்பட்டுள்ளன. கலந்தாய்வுக்கான அழைப்புக் கடிதம் கிடைக்கப் பெற்ற விண்ணப் பதாரர்கள் மற்றும் குறிப்பிட்ட கட் - ஆப் மதிப்பெண் இருந்தும் அழைப்புக் கடிதம் கிடைக்கப் பெறாத விண்ணப்பதாரர்கள் கலந் தாய்வில் உரிய சான்றிதழ்களுடன் கலந்து கொள்ளலாம்.
கலந்தாய்வு நாள் மற்றும் நேரத்தில் மாற்றம் ஏதும் கோர இயலாது. இவ்வாறு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
கட் ஆப் மதிப்பெண் விவரம்
ஓசி - 57.933, எஸ்சி (அருந்ததியர்) - 53.129, எஸ்சி - 52.967, எஸ்டி - அனைத்து விண்ணப்பதாரர்கள், பிசி (முஸ்லிம்) - 54.064, பிசி - 53.600, எம்பிசி, டிஎன்சி - 51.967. சிறப்பு பிரிவினர்: மாற்றுத் திறனாளிகள் (உடல் ஊனமுற்றோர்) - 47.628, முன்னாள் ராணுவத்தினர் வாரிசு - 52.250.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT