Published : 29 Aug 2019 10:05 AM
Last Updated : 29 Aug 2019 10:05 AM
டி.ஜி.ரகுபதி
கோவை
கோவை மாநகரில் மழைநீரை சேமித்து பயன்படுத்தும் வகைகளில் தொட்டிகள் அமைக்க மாநகராட்சி நிர்வாகத்தின் சார்பில் திட்டமிடப்பட்டுள்ளது.
தமிழக அரசின் சார்பில், கடந்த 2001-ம் ஆண்டு மழைநீர் சேகரிப்பு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. நிலத்தடி நீர்மட்டம் உயரும் வகையில், வீடுகள் உள்ளிட்ட அனைத்து வகை கட்டிடங்களின் மேற்கூரைகளில் விழும் மழைநீர் வீணாகாமல், குழாய்கள் மூலம் நிலத்துக்கு செல்லும் வகையில் மழைநீர் கட்டமைப்புகள் ஏற்படுத் தப்பட்டன. நாட்கள் செல்லச் செல்ல மழைநீர் சேகரிப்பு திட்டம் முழு மையாக செயல்படுத்தப்பட வில்லை. ‘‘மழைநீர் சேகரிப்பு திட்டம் பெயரளவுக்கு ஏற்படுத்தப்படு கிறது. முறையாக பராமரிக்கப்படு வதில்லை. அரசு மற்றும் தனியார் என அனைத்து வகை கட்டிடங்களி லும் இதே நிலை தான் தொடர்கிறது,’’ என சமூகஆர்வலர்கள் தரப்பில் புகார்களும் கூறப்பட்டன.
நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த் தும் வகையில், அனைத்து கட்டிடங் களிலும் மழைநீர் கட்டமைப்பு அவசி யம் என தமிழக அரசின் சார்பில் சமீபத்தில் மீண்டும் வலியுறுத்தப்பட் டது. கோவை மாநகரில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு உள்ளதாக, முறையாக பராமரிக்கப்படுகிறதா என்பதை கண்டறிய வார்டுக்கு 3 பேர் என 300 பேர் அடங்கிய குழு அமைக்கப்பட்டது. இக்குழுவினர் வீடு வாரியாக ஆய்வு செய்து வரு கின்றனர். மாநகரில் மொத்தம் உள்ள 5.11 லட்சம் வீடு உள்ளிட்ட கட்டிடங்களில், கிட்டத்தட்ட 15 ஆயி ரம் வீடுகளில் மட்டுமே தற்போது வரை ஆய்வு செய்யப்பட்டுள்ளது. தவிர, மழைநீரை வீணாாக்காமல், சுத்திகரிப்பு செய்து குடிநீராகவும் பயன்படுத்தலாம் என மாநகராட்சி நிர்வாகத்தினர் அறிவுறுத்தி வரு கின்றனர்.
மாநகராட்சி ஆணையர் ஷ்ரவன் குமார் ஜடாவத் கூறும் போது, ‘‘மாநகரில் மழைநீர் சேகரிப் புக்கு முக்கியத்துவம் கொடுக்கப் படுகிறது. தவிர, மழைநீரை வீணாக் காமல் குறிப்பிட்ட கொள்ளளவு கொண்ட தொட்டிகளில் சேமித்து குடிநீராகவும் பயன்படுத்தலாம் என மக்களிடம் விழிப்புணர்வும் ஏற்படுத்தப்படுகிறது.
இதற்கென உள்ள பிரத்யேக வடிகட்டி உள்ளிட்ட கட்டமைப்பை மழைநீர் சேகரிக்கும் தொட்டியில் பயன்படுத்தினால், மழைநீரில் வரும் கல்,கசடு போன்றவை நீங்கி சுத்தமான நீர் கிடைக்கும். இதை குடிக்கவும், பிற தேவைகளுக்கும் பயன்படுத்தலாம். இதற்கான கட்டமைப்பு செலவும் குறைவே. மாநகராட்சிக்கு சொந்தமான அலு வலகம் மற்றும் பள்ளிக் கட்டிடங் களில் இந்த மழைநீர் சேகரிப்பு தொட்டிகளை அமைக்க திட்டமிடப் பட்டுள்ளது. பொதுமக்களும் தங்களது வீடுகளில் இதுபோன்ற மழைநீர் சேமித்து பயன்படுத்தும் தொட்டிகளை அமைத்துக் கொள்ள லாம். மழைநீரை வீணாக்காமல், நீரின்றி வறண்டு காணப்படும் ஆழ் குழாய் கிணறுகளில் செலுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
பொதுமக்கள் பயன்பாட்டுக் காக, மழைநீர் கட்டமைப்பு விதம் குறித்து தனியார் நிறுவனங்களிடம் இருந்து வெவ்வேறு அளவுகளில் மாதிரிகள் பெற்று, அதை மாநக ராட்சி இணையதளத்தில் பதி வேற்றவும் திட்டமிடப்பட்டுள்ளது. மாநகரில் உள்ள மத்திய, மாநில என அனைத்து அரசு துறைகளின் அலுவலகத்துக்கும், ‘மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் ஏற்படுத்தியிருக்க வேண்டும். அவற்றை முறையாக பராமரிக்க வேண்டும்,’ என மாநகராட்சி நிர்வாகம் சார்பில் கடந்த 3 நாட்களுக்கு முன்னர் நோட்டீஸ் விநியோகிக்கப்பட்டுள்ளது,’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT