Published : 21 Jul 2019 09:48 AM
Last Updated : 21 Jul 2019 09:48 AM
சென்னை
சென்னையில் பராமரிப்பு பணி காரணமாகா சில மின்சார ரயில் போக்குவரத்து ரத்து செய்யப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
இதுகுறித்து தென்னக ரயில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், இன்று குறிப்பிட்ட நேரத்தில் சில மின்சார ரயில் சேவைகள் ரத்து செய்யப்படுகின்றன. சென்னை கடற்கரை- வேளச்சேரி வழித்தடத்தில் 36 ரயில் சேவை ரத்து செய்யப்படுகிறது. இதனால், காலை 7.50 மணி முதல் மதியம் 1.50 மணி வரை மின்சார ரயில் சேவை ரத்து செய்யப்படுகிறது. மதியம் 2 மணி முதல் இந்த வழித்தடத்தில் ரயில் சேவை தொடங்கும்.
இதேபோல், சென்னை கடற்கரை - தாம்பரம் வழித்தடத்திலும் காலை 10.30 முதல் மதியம் 3.10 மணி வரை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டு உள்ளது. சென்னை கடற்கரை-செங்கல்பட்டு வழித்தடத்திலும் காலை 11 மணி முதல் மதியம் 1.50 மணி வரை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டு உள்ளது.
இவ்வாறு தென்னக ரயில்வே கூறியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT