Published : 21 Jul 2019 07:53 AM
Last Updated : 21 Jul 2019 07:53 AM

வெள்ளம், பூகம்பம் போன்ற இயற்கை பேரிடரின்போது உண்ணக்கூடிய அவசரகால உணவு பொட்டலம்: சென்னை ஐஐடி மாணவர்கள் உருவாக்கி சாதனை

சென்னை

இயற்கை பேரிடரின்போது உடனடி யாக உண்ணக்கூடிய அவசரகால உணவு பொட்டலத்தை சென்னை ஐஐடி மாணவர்கள் உருவாக்கி உள்ளனர்.

புயல், வெள்ளம், பூகம்பம் போன்ற இயற்கைச் சீற்றங்கள் ஏற்படும்போது, பாதிக்கப்படும் மக்களுக்கு உணவு வழங்குவது மிகப்பெரிய சவாலாக இருந்து வருகிறது. பேரிடர்களின்போது வீடுகளையும், உடைமைகளையும் இழந்த மக்கள் விரைவாக மீட்கப்பட்டு நிவாரண மையங்களில் தங்கவைக்கப்பட்டாலும் அவர்க ளுக்கு உடனடியாக உணவு கிடைப் பதில்லை. இதுபோன்ற சூழலில், பேரிடர்களின்போது உடனடியாக உண்ணக்கூடிய, சத்துமிகுந்த அவசரகால உணவு பொட்ட லத்தை உருவாக்கி சென்னை ஐஐடி மாணவர்கள் இருவர் சாதனை படைத்துள்ளனர். அவர்களில் ஒருவர் டிசைன் இன்ஜினீயரிங் படித்துவரும் சிஹார் பிரகாஷ் என்ற மாணவர். மற்றொருவர் எலெக்ட்ரிக்கல் இன்ஜினீயரிங் படித்துவரும் மாணவியான மேகா அகர்வால்.

இவர்கள் உருவாக்கியுள்ள உணவுப் பொட்டலத்தின் பெயர் ‘கிரீன் எய்ட்’. அதில், உலர்ந்த கஞ்சி, சத்துமிக்க விதைகள், தயிர், முளைக்கீரை, ஒரு பாக்கெட் தண்ணீர் ஆகியவை இடம்பெற்றி ருக்கும். சுவைமிகுந்த இந்த உணவு பொட்டலத்தை உடனடியாகவும் உண்ணலாம். எடுத்து வைத்து தேவைப்படும்போதும் பயன்படுத் திக் கொள்ளலாம். இது எளிதில் கெட்டுப்போகாது.

இதுகுறித்து மாணவி மேகா அகர்வால் கூறும்போது, “பொது வாக நிவாரண மையங்களில் வழங்கப்படும் உணவுப் பொட்ட லங்கள் சுவையாகவும் சத்தானதா கவும் இருப்பதில்லை. ஆனால், நாங்கள் உருவாக்கியுள்ள உணவுப் பொட்டலம், சுவையாகவும், ஊட்டச்சத்து மிக்கதாகவும் இருக்கும். அதிலுள்ள முளைக்கீரை வைட்டமின்களையும், தாதுப் பொருட்களையும் உள்ளடக்கியது" என்றார்.

மாணவர் பிரகாஷ் கூறும்போது, “நீண்ட ஆராய்ச்சி மற்றும் பரிசோ தனைக்குப் பின்னரே எங்கள் தயாரிப்பை இறுதி செய்துள்ளோம். இந்த உணவு, மக்களின் சத்து தேவைகளை பூர்த்தி செய்யும் வகை யில் அமைந்திருக்கும். இந்த உணவை அப்படியே உண்ண லாம்” என்றார்.

குஜராத் ஐஐடியில் நடைபெற்று வரும் வருடாந்திர கோடைகால பயிற்சி முகாமில் தங்கள் உணவு தயாரிப்பை இவர்கள் காட்சிப்படுத்தி உள்ளனர். ரூ.25 செலவில் இந்த உணவு பொட்டலத்தை உருவாக்க முடியும் என்று இவர்கள் கூறுகின்றனர். இதற்கு காப்புரிமை பெறவும் இவர்கள் பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x