Published : 06 May 2014 12:00 AM
Last Updated : 06 May 2014 12:00 AM

மின்தடை புகாருக்கான தொலைபேசி எண் மாற்றம்- விழிப்புணர்வு இல்லை.. இணையதளத்தில் மாற்றவில்லை: மக்கள் குழப்பம்

மின்தடை குறித்து புகார் அளிப்பதற் கான ‘கட்டணமில்லா’ தொலை பேசி எண் ‘கட்டண’ எண்ணாக மாற்றப்பட்டுள்ளது. ஆனால், இதுகுறித்து போதிய விழிப் புணர்வு ஏற்படுத்தப்படாத தாலும் இணையதளத்தில் பழைய எண்ணே குறிப்பிடப் பட்டுள்ளதாலும் மக்கள் குழப்பம் அடைகின்றனர். ‘கட்டண’ போன் சேவையை இலவச சேவையாக மாற்ற வேண்டும் என்ற கோரிக் கையும் எழுந்துள்ளது.

மின் தட்டுப்பாடு உள்ளதால், தமிழகம் முழுவதும் மின்வாரியம் சார்பில் குறிப்பிட்ட நேரங்களில் மின்தடை அமல்படுத்தப்படுகிறது. இது இல்லாமல், தொழில்நுட்பக் கோளாறுகள் காரணமாக மின் தடை ஏற்பட்டால் மின் வாரிய அலுவல கத்துக்கு பொதுமக்கள் தொலை பேசியில் புகார் அளிக்க லாம்.

24 மணிநேரப் பிரிவு

இதற்காக ஒவ்வொரு மின் பிரிவு பகுதிகளிலும் மின் தடை நீக்கப்பிரிவு என்ற தனிப் பிரிவு செயல்படுகிறது. இந்த பிரிவில் தொலைபேசி தொடர்பை பதிவு செய்பவர், போர்மேன் மற்றும் மின் உதவியாளர்கள் 3 ஷிப்ட்களாக 24 மணி நேரமும் பணியில் இருப்பார்கள். மின் தடை நீக்கும் பிரிவுக்கென தனியாக வாகனம் ஒன்றும் எப்போதும் தயாராக இருக்கும். மின் தடை நீக்கும் மையங்கள் அந்தந்த பிரிவு உதவி செயற்பொறியாளர்களின் கட்டுப்பாட்டில் செயல்படும்.

தொலைபேசியில் புகார் அளித்தால் பல பகுதிகளில் மின் தடை நீக்கப் பிரிவு ஊழியர்கள் சரியாக கவனிப்பதில்லை என்று புகார் எழுந்தது. இதையடுத்து, ஒருங்கிணைந்த புகார் மையமும், தனித் தொலைபேசி எண்ணும் உருவாக்கப்பட்டது. இதற்காக முதலில் ‘155333’ என்ற இலவச தொலைபேசி எண் அறிவிக்கப் பட்டது. சென்னை, மதுரை, திருச்சி, கோவை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இந்த தொலை பேசி எண் இயக்கத்தில் இருந்தது.

இந்நிலையில் தற்போது, ‘1912’ என்ற புதிய எண்ணை தமிழக மின் வாரியம் அறிமுகப்படுத்தியது. இதனால் பழைய எண் (155333) முடக்கப்பட்டது.

‘1912’ எண்ணில் அழைத்தால் ஒரு நிமிடத்துக்கு ஒரு ரூபாய் மொபைல் போன் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. மேலும், 1912 குறித்த விழிப்புணர்வுப் பலகை கள் எதுவும் மின் தடை நீக்கும் அலுவலகத்திலோ, மின் வாரிய செயற்பொறியாளர் மற்றும் கட்டணம் வசூலிக்கும் மையங்களிலோ அமைக்கப் படவில்லை. ‘மின்தடை குறித்து புகார் அளிக்க வேண்டிய எண்’ என மின்வாரிய இணையதளத்திலும் பழைய எண்ணே உள்ளது. புதிய எண் சேர்க்கப்படவில்லை. இதனால் பொதுமக்கள் மிகவும் குழப்பம் அடைகின்றனர்.

மீண்டும் இலவசம் ஆகுமா?

‘1912’ குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவது, இணையதளத்தில் பழைய எண்ணை நீக்கிவிட்டு புதிய எண்ணை பதிவேற்றம் செய்வது, ஏற்கெனவே இருந்ததுபோல இந்த புதிய எண்ணையும் கட்ட ணமில்லா தொலைபேசி எண்ணாக மாற்றுவது ஆகிய நடவடிக் கைகளை மின்வாரியம் எடுக்க வேண்டும் என்று எதிர்பார்க் கின்றனர் பொதுமக்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x