Published : 13 May 2014 11:00 AM
Last Updated : 13 May 2014 11:00 AM
திருப்பூர் பனியன் நிறுவனத்தில் பல கோடி மோசடியில் ஈடுபட்ட தாக ஒருவரை காவல்துறையினர் ஞாயிற்றுக்கிழமை இரவு கைது செய்தனர்.
சேலம் அம்மாபேட்டையைச் சேர்ந்தவர் என்.பாலசுப்பிர மணியம் (55). இவர், திருப்பூர் காந்தி நகரில் ஈபி காலனி விரிவாக்கம் பகுதியில் உள்ள தூத்துக்குடி ஜோசப் ஸ்டாலின் என்பவருக்குச் சொந்தமான பனியன் ஏற்றுமதி நிறுவனத்தில், நிர்வாகியாக பணியாற்றி வந் துள்ளார். நிறுவனத்தின் பெரும் பான்மையான பொறுப்புகள் பாலசுப்பிரமணியம் வசம் ஒப்படைக்கப்பட்டிருந்ததாம்.
இந்நிலையில், நிறுவனத்தின் கணக்குகளை தணிக்கை செய்த போது, மோசடி அம்பலமாகியுள் ளது. நிறுவனத்தில் பணியாற்றிய போது தனக்குள்ள அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி ரூ.6.74 கோடி மோசடி செய்துள்ளாராம்.
இதையடுத்து, ஜோசப் ஸ்டாலி னுடைய நிறுவனங்களின் முதன்மை நிர்வாக அலுவலர் ஆன்டனி ஜோ ராஜா திருப்பூர் மாநகர குற்றப்பிரிவு காவல் துறையிடம் புகார் அளித்தார். மாநகர குற்றப்பிரிவு ஆய்வாளர் சுந்தர்ராஜன் தலைமையிலான போலீஸார் பாலசுப்பிரமணியம் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்து, அவரை கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT