Published : 05 May 2014 08:45 AM
Last Updated : 05 May 2014 08:45 AM

இந்திய - இலங்கை மீனவர் மே 12-ல் பேச்சுவார்த்தை: கொழும்பில் நடைபெறுகிறது

இந்திய, இலங்கை மீனவர்களுக்கு இடையிலான இரண்டாம்கட்ட பேச்சுவார்த்தை மே 12-ம் தேதி கொழும்பில் நடைபெறுகிறது.

பாக் நீரிணைப் பகுதியில் இருநாட்டு மீனவர்களுக்கு இடையே நீண்டகாலமாகத் தொட ரும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண மீனவர் சங்க பிரதிநிதிகள் இடையே நேரடி பேச்சுவார்த்தை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதன்படி கடந்த ஜனவரி 27-ம் தேதி சென்னையில் முதல்கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இதைத் தொடர்ந்து மார்ச் 13-ல் இரண்டாம்கட்ட பேச்சு வார்த்தை நடைபெறுவதாக இருந்தது. பல்வேறு காரணங்களால் மார்ச் 27-ம் தேதிக்கு தள்ளிவைக்கப் பட்டது. ஆனால் அன்றைய தினமும் பேச்சுவார்த்தை நடைபெற வில்லை. இந்நிலையில் மே 12, 13-ம் தேதிகளில் இருதரப்பு மீனவர்கள் பேச்சுவார்த்தையை நடத்தலாம் என்று இலங்கை அரசுக்கு இந்திய அரசு அண்மையில் கடிதம் அனுப்பியது. இதன்படி இலங்கை மீன் வளத் துறை அமைச்சர் ரஜிதா சேனரத்னேவின் அறிவுரைப்படி இரு தரப்பு மீனவர்களுக்கு இடையிலான இரண்டாம்கட்ட பேச்சுவார்த்தை மே 12-ம் தேதி கொழும்பில் நடைபெறும் என்று அந்த நாட்டு மீன் வளத் துறை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

இந்தியத் தரப்பில் பல்வேறு மீனவர் சங்கங்களைச் சேர்ந்த 18 பிரதிநிதிகளும் 8 அதிகாரிகளும் பேச்சுவார்த்தையில் பங்கேற் கின்றனர். இலங்கை தரப்பில் 20 பிரதிநிதிகளும் 10 அதிகாரிகளும் கலந்துகொள்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x