Published : 29 May 2014 10:48 AM
Last Updated : 29 May 2014 10:48 AM

3 ஆண்டுகளில் 90 லட்சம் குடும்பங்களுக்கு விலையில்லா மிக்சி, கிரைண்டர், மின்விசிறி: அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி தகவல்

தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளில் 89 லட்சத்து 94 ஆயிரத்து 866 பேருக்கு விலையில்லா மிக்சி, கிரைண்டர் மற்றும் மின்விசிறி விநியோகம் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார்.

இதுதொடர்பாக செய்தி மக்கள் தொடர்புத்துறை வெளியிட் டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்ப தாவது: தமிழக அரசின் சிறப்புத் திட்ட செயலாக்கத்துறையின் ஆய்வுக்கூட்டம், செய்தி மற்றும் சிறப்புத் திட்ட செயலாக்கத் துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் புதன் கிழமை நடந்தது. இதில் அமைச்சர் பேசியதாவது:

தமிழகத்தில் வீட்டுப் பணி களை பெண்கள் எளிதாக மேற்கொள் ளும் வண்ணம் 2011-ம் ஆண்டு அரிசி பெறத் தகுதியுடைய குடும்ப அட்டைதாரர்களுக்கு விலை யில்லா மிக்சி, கிரைண்டர் மற்றும் மின்விசிறி வழங்க முதல்வர் உத்தரவிட்டார்.

பொது விநியோக திட்டத்தின் அடிப்படையில் 2011-12ம் ஆண்டில் 25 லட்சம் குடும்பங்களுக்கும் 2012-13ம் ஆண்டில் 35 லட்சம் குடும்பங்களுக்கும் விலையில்லா மின்விசிறி, மிக்சி மற்றும் கிரைண்டர்கள் வழங்கப்பட்டன.

மேலும் 2013-14ம் ஆண்டில் கடந்த செவ்வாய்க்கிழமை வரை 29 லட்சத்து 94 ஆயிரத்து 866 பேருக்கு மிக்சி, மின்விசிறி, கிரைண்டர்கள் வழங்கப்பட்டுள்ளன. கடந்த 3 ஆண்டுகளில் தமிழகம் முழுவதும் 89 லட்சத்து 94 ஆயிரத்து 866 பேருக்கு விலை யில்லா மின்விசிறி, மிக்சி, கிரைண்டர் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிதியாண்டிலும் (2014-15) தொடர்ந்து இந்தப் பொருட்களை வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இவ்வாறு கூறிய அமைச்சர், இத்திட்டத்தின் இலக்கினை அடைய, எல்லா மாவட்டங்களிலும் இருப்பில் உள்ள பொருட்களின் எண்ணிக்கை, தேவைப்படும் எண்ணிக்கை, சேவை மையங்கள், பொருட்களை பாதுகாப்பாக வைத்தல், பொருட்கள் வைக்கப் படும் அறைகளின் பாதுகாப்பு உள்ளிட்டவை குறித்தும் ஆலோச னைகளை வழங்கினார்.

இவ்வாறு அரசு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x