Published : 08 Nov 2014 11:40 AM
Last Updated : 08 Nov 2014 11:40 AM
அரசின் திட்டங்கள் மற்றும் செயல் பாடுகளின் பலன்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும் பணிகளை தீவிரப்படுத்த வேண்டுமென்று, செய்தி மற்றும் மக்கள் தொடர்புத் துறை அதிகாரிகளுக்கு, அமைச்சர் ராஜேந்திர பாலாஜி உத்தரவிட் டுள்ளார்.
செய்தி மற்றும் மக்கள் தொடர் புத்துறை மற்றும் சிறப்புத் திட்டங்கள் அமலாக்கத் துறை அமைச் சகத்தின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம், தலைமைச் செயலகத்தில் நடந்தது. இதில், துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை செயலர் ராஜா ராம், செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் குமரகுருபரன், எழுதுபொருள் அச்சுத்துறை இயக்குநர் ஜெய காந்தன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.
அமைச்சர் உத்தரவு
இதில் அரசின் செயல்பாடுகள் மற்றும் திட்டங்கள் அமல்படுத்து வது குறித்து விரிவாக விவாதிக் கப்பட்டது. அப்போது, அரசின் திட்டங்களை மக்களின் கவனத்துக்கு கொண்டு செல்லும் பணிகளில் செய்தித் துறை தீவிரமாக செயல்பட வேண்டு மென்று அமைச்சர் உத்தரவிட்டார்.
தமிழக அரசின் கட்டுப்பாட்டிலுள்ள நினைவகங்களை, உரிய அலுவலர்களை நியமித்துப் பராமரிக்க வேண்டும். காலியான இடங்களை விரைந்து நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும், அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவிட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT