Published : 15 Dec 2013 11:01 AM
Last Updated : 15 Dec 2013 11:01 AM
சென்னை கடற்கரை - செங்கல்பட்டு இடையே செல்லும் மின்சார ரயில்களில் நெரிசல் நேரத்தில் பெண்களுக்குப் பாதுகாப்பு அளிப்பதற்காக சிறப்பு போலீஸ் படை அமைக்கப்பட்டுள்ளது.
சென்னை கடற்கரை - செங்கல்பட்டு இடையே நூற்றுக்கணக்கான தடவை மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன. பெண் பயணிகளுக்கு ஆண் பயணிகள் மற்றும் திருநங்கைகளால் பல்வேறு சிரமங்கள் ஏற்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன. அதனால், சென்னை கடற்கரை - செங்கல்பட்டு மார்க்கத்தில் இயக்கப்படும் மின்சார ரயில்களில் பெண்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க சிறப்பு போலீஸ் படையை அமைக்க வேண்டும் என்று தமிழ்நாடு ரயில்வே போலீஸ் கண்காணிப்பாளர் கயல்விழி உத்தரவிட்டார்.
அதன்படி, பெண் போலீஸ் உதவி ஆய்வாளர் பி.சரளா தலை மையில் 7 பேர் கொண்ட சிறப்பு போலீஸ் படையை தமிழ்நாடு ரயில்வே போலீஸ் துணைக் கண்காணிப்பாளர் பொன்ராம் அமைத்துள்ளார்.
இதுகுறித்து பொன்ராம் கூறியதாவது:-
சென்னை கடற்கரை - செங்கல் பட்டு இடையே இயக்கப்படும் 9 மற்றும் 12 பெட்டிகள் கொண்ட மின்சார ரயில்களில் முறையே 3 மற்றும் 4 பெண்கள் பெட்டிகள் உள்ளன.
இப்பெட்டிகளில் பெண்கள் எவ்வித அச்சமுமின்றி பயணம் செய்வதை உறுதி செய்வதற்காக பெண் போலீஸ் சிறப்புப் படையை அமைத்துள்ளோம். இந்தப் படையி னர் நெரிசல் நேரத்தில், பெண்கள் பெட்டிகளில் பாதுகாப்புப் பணி யில் ஈடுபடுவார்கள்.
இதனால், நகை பறிப்பு, ஈவ்டீசிங், உடமைகளை திருடுதல் போன்ற குற்றச் செயல்கள் நடக்காமலும், கட்டாயப்படுத்தி பணம் கேட்கும் திருநங்கைகளின் தொந்தரவும் முற்றிலுமாகத் தடுக்கப்படும் என்றார் அவர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT