Published : 28 Nov 2013 12:00 AM
Last Updated : 28 Nov 2013 12:00 AM
சென்னை வந்த மெட்ரோ ரயில் பெட்டிகள் கண்டெய்னர் லாரி மூலம் கோயம்பேடு பணிமனைக்கு நள்ளிரவில் கொண்டு செல்லும் பணி தொடங்கியது.
சென்னையில் மெட்ரோ ரயில் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. சென்னை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு ரூ.147.19 கோடியில் தலா 4 பெட்டிகள் கொண்ட 42 ரயில்கள் தயாரிக்கப்படுகின்றன. இவற்றில் 9 ரயில்கள் பிரேசில் நாட்டில் லாபா என்ற இடத்தில் உள்ள ஆல்ஸ்டாம் தொழிற்சாலையில் தயாரிக்கப்படுகின்றன. மீதமுள்ள 33 ரயில்கள் ஆந்திர மாநிலம் தடா அருகே ஸ்ரீசிட்டியில் உள்ள ஆல்ஸ்டாம் ரயில் பெட்டி தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டு வருகின்றன.
பிரேசில் நாட்டில் தயாரிக்கப்பட்ட 4 பெட்டிகள் கொண்ட முதல் மெட்ரோ ரயில் சென்னை வந்துவிட்டது. இந்த ரயிலில் சோதனை ஓட்டமும் நடந்தது. இந்நிலையில், பிரேசில் நாட்டிலிருந்து ஜெர்மன் நாட்டுக்கு சொந்தமான பிபிசி என்ற சரக்கு கப்பல் மூலம் 2 மெட்ரோ ரயில்களுக்கான 8 பெட்டிகள் சென்னை துறைமுகத்துக்கு செவ்வாய்க்கிழமை இரவு வந்தன.
கப்பலில் இருந்து ரயில் பெட்டிகளை இறக்கும் பணிகள் புதன்கிழமை தொடங்கியது. ராட்சத கிரேன் மூலம் பெட்டிகள் கீழே இறக்கப்பட்டு கண்டெய்னர் லாரிகளில் வைக்கப்பட்டன. இந்த பணி மாலை வரை நடந்தது. பின்னர் நள்ளிரவில் ரயில் பெட்டிகள் கோயம்பேடு மெட்ரோ ரயில் பணிமனைக்கு கொண்டு செல்லும் பணி மேற்கொள்ளப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT