Published : 28 Jun 2017 09:37 AM
Last Updated : 28 Jun 2017 09:37 AM
எழுத்தாளர் கழனியூரன் உடல்நலக் குறைவால் சென்னை யில் நேற்று காலமானார். அவருக்கு வயது 63. எம்.எஸ்.அப்துல் காதர் என்ற இயற்பெயர் கொண்ட அவர், நெல்லை மாவட்டம் கழுநீர்குளம் கிராமத்தில் பிறந்தவர். ஆசிரிய ராகப் பணியாற்றிய அவர், ஊர்ப் பெயரையே தனது புனைப்பெய ராகக் கொண்டவர்.
இவர், 50-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். கரிசல் காட்டு எழுத்தின் முன்னோடியான கி.ராஜநாராயணனுடன் இணைந் தும் நூல்களை எழுதியுள்ளார்.
நுரையீரல் புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த அவர் சென் னையில் நேற்று காலமானார். அவரது உடல் இன்று சொந்த ஊரான நெல்லை மாவட்டம், கழுநீர் குளத்தில் மாலை 4 மணியளவில் நல்லடக்கம் செய்யப்படுகிறது.
கழனியூரன் மறைவுக்கு ‘பிரிய நண்பனின் பிரிவு' என்ற தலைப்பில் எழுத் தாளர் கி.ராஜநாராயணன் இரங்கல் கடிதம் எழுதியுள்ளார்.
கி.ராவின் இரங்கல் கடிதம்
‘பிரிய நண்பனின் பிரிவை எப்படிச் சொல்ல?
வெள் இடி விழுந்தது போல என்பார்கள். மேகம் இன்றி, மின்னல் இன்றி வெள்ளிடி வீழ்ந்தது போல் கெடுவாய்.. நமனே கெடு வாய்.. என்கிறான் எமனைப் பார்த்து நமக்கு உற்ற தோழன்.
யாருடைய மரணச்செய்தி யைக் கேட்டாலும் இந்தப் பாடலே மனசில் தோன்றும். ‘சண்டாளப் பாவி எமனே கரி வேண்டுமன்றால் பூச்செடியை அழிப்பாயா?’ என்று கேட்கிறான் பாடகன். ‘கழனி’ என்றுதான் செல்ல மாக அழைப்போம் அவரை. ராட்சச ‘நண்டு’வின் பிடியில் இருந்து விடுபட்டுவிட்டார் என்று நினைத்தோம், ஆனால் மோசம் பண்ணிவிட்டதே.
என் கைக்குக் கையாக இருந் தார் கழனி. வேகமாக இயங்கி னார். ஏன் என்று இப்போ நினைக் கும்போது தெரிகிறது. ரமலான் நோம்பு வரும்போதெல்லாம் இனி, கழனி ஞாபகத்துக்கு வருவார். எனது புத்தக ஷெல்ப்பை கிளரும்போதெல்லாம் கழனியூரன் முகம் காட்டுவார். நண்பனே போய் வா..!’
இவ்வாறு எழுத்தாளர் கி.ராஜ நாராயணன் எழுதியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT