Published : 05 Dec 2013 12:00 AM
Last Updated : 05 Dec 2013 12:00 AM
சென்னையில் புதன்கிழமை மட்டும் 3 கல்லூரிகளை சேர்ந்த மாணவர்கள் வெவ்வேறு இடங்க ளில் தகராறு செய்தனர். இவற்றால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர்.
மாநிலக் கல்லூரி
சென்னை மாநில கல்லூரி மாணவர் களுக்கு இடையே திடீரென கோஷ்டி மோதல் ஏற்பட்டது. மாணவர்கள் ஒருவருக்கொருவர் கற்களால் வீசி தாக்கிக் கொண்டனர்.
கல்லூரி வளாகத்துக்குள் மோதிக் கொண்ட மாணவர்கள் திடீரென வெளியில் ஓடிவந்தனர். அங்கும் சாலையில் ஒருவர் மீது ஒருவர் கற்களை வீசிக்கொண்ட னர். இதனால் மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் வாகனத் தில் சென்றவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். அண்ணா சதுக்கம் காவல் துறையினர் விரைந்து வந்து மாணவர்களை விரட்டியடித்த பின்னரே அமைதி ஏற்பட்டது. எழிலகம் அருகே ஒரு ஓட்டலில் சாப்பிடும்போது இரு மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட பிரச்சனை, கல்லூரி வளாகத்துக்குள் கோஷ்டி பூசலாக உருவெடுத்துள்ளது.அதனால் மாணவர்கள் மோதியுள்ளனர்.
நந்தனம் அரசு கலைக் கல்லூரி
சென்னை அண்ணா சாலையில் நந்தனம் அரசு கல்லூரி மாணவர் கள் சிலர் 23சி மாநகர பேருந்தின் மேற்கூரையில் ஏறி பயணம் செய்துள்ளனர்.
பேருந்துக்குள் இருந்த மாணவர்கள் சத்தமாக பாட்டுப் பாடி, அந்தப்பாட்டுக்கு தாளம் அடிக்கிறோம் என்ற பெயரில் பேருந்தை தட்டி பயங்கர சத்தம் எழுப்பியுள்ளனர். மாணவர்களில் ஒருவன் பேருந்தின் மேற்கூரையில் ஏறி எழும்பி நின்று நடனம் ஆடி னான். இதை கவனித்த போக்கு வரத்து காவலர்கள் பேருந்தை அண்ணா சாலையிலேயே நிறுத்தி மாணவர்களை விரட்டியடித்தனர். பேருந்தின் மேற்கூரையில் ஏறிய மாணவர்களை மட்டும் பிடிக்க முயன்றபோது, அவர்கள் அனைவரும் தப்பி ஓடினர். நடனம் ஆடிய மாணவனை குறிவைத்து மோட்டார் சைக்கிளில் விரட்டி சென்ற காவலர்கள் அவரை பிடித்து காவல் நிலையம் அழைத்துச் சென்றனர்.
புதுக் கல்லூரி
சென்னை ராயப்பேட்டையில் இருக்கும் புதுக் கல்லூரி மாணவர்கள் சுமார் 20 பேர் சேர்ந்து, பிராட்வே-மந்தைவெளி செல்லும் பேருந்தில் ஏறி, பெண் பயணிகளிடம் தகராறு செய்துள்ளனர்.
அவர்களை காவலர்களின் உதவியுடன் ஓட்டுநர் கீழே இறக்கி விட, அருகே இருந்த கடைக்காரர்கள், அந்த வழியாக வந்த சில வாகன ஓட்டிகளிடமும் மாணவர்கள் தகராறில் ஈடு பட்டுள்ளனர். மேலும், அவர்கள் வந்த பேருந்தின் கண்ணாடி களையும் கற்களால் தாக்கி உடைத்தனர். இதுகுறித்து அண்ணாசாலை காவல் துறையி னர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த 30-ம் தேதியும் சென்னை மாநில கல்லூரி மற்றும் பச்சை யப்பா கல்லூரி மாணவர்கள் மோதிக் கொண்டது நினைவிருக் கலாம். அதில் 3 பேருக்கு அரிவாள் வெட்டும் விழுந்தது. 3 பேர் கைது செய்யப்பட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT